Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொடைக்கானலில் மயங்கி விழுந்த தாய் யானை.. காப்பாற்றுவதற்காக குட்டி யானை நடத்திய பாசப்போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: கொடைக்கானலை பொறுத்தவரை பழனி சாலை செல்லும் பகுதியிலும், பூண்டி, கிளாவரை பகுதிகளிலும், வில்பட்டிக்கு கீழ் உள்ள பகுதிகளிலும், பள்ளங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், பேரிஜம் ஏரி பகுதிகளிலும் காட்டு யானை நடமாட்டம் உள்ளது. அந்த வகையில் வில்பட்டி அருகே கணேசபுரம் பகுதியில், உடல்நலம் பாதித்து யானை ஒன்று மயங்கி விழுந்தது. அந்த யானைக்கு வனத்துறையினர் 8 மணி நேரம் சிகிச்சை அளித்து காப்பாற்றினர். தாயை விட்டு பிரியாமல் குட்டி யானை நின்று பாசப்போராட்டம் நடத்தியது காண்போரை நெகிழ வைத்தது.

கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலம் என்கிற நிலையில், அடர்ந்த வனப்பகுதிகளை கொண்ட மலைவாசல்தலம் ஆகும். இந்த மலைப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளன. இவை வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராம பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும் முகாமிடுவது வழக்கம்.

Baby elephant fights to save mother elephant in Kodaikanal

அந்த வகையில் கொடைக்கானல் தாலுகா, வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அளத்துறை அடுத்த கணேசபுரம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் பெண் யானை ஒன்று மயங்கி விழுந்து கிடந்திருந்தது. அதன் அருகே குட்டி யானை நின்று கொண்டிருந்தது. இதனைக் கண்ட தோட்டத்து உரிமையாளர் செல்வம் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட (கொடைக்கானல்) வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா, உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் சரவணகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் கொடைக்கானல் கால்நடை உதவி இயக்குநர் ஹக்கீம், வனத்துறை டாக்டர்கள் கலைவாணன், முத்துராமலிங்கம் குழுவினர் மருத்துவ உபகரணங்களுடன் அங்கு வந்தார்கள்.

அவர்கள் மயங்கி கிடந்த பெண் யானை அருகே சுமார் 3 வயது உடைய குட்டி ஆண் யானை நின்று கொண்டிருந்ததை கண்டனர். அந்த குட்டி யானை தனது தாயை யாரும் நெருங்க விடாதவாறு அனைவரையும் முட்டுவது போல் மிரட்டியபடி பாசப்போராட்டம் நடத்திக்கொண்டிருந்தது. இதனையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு ஒலி எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும் குட்டி யானையை விரட்டினர். பின்னர் மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை அளித்தனர். 75 குளுக்கோஸ் பாட்டில்கள், ஆண்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டது.

சுமார் 8 மணி நேர சிகிச்சைக்கு பிறகு, நேற்று அதிகாலையில் பெண் யானை கண் விழித்தது. இதையடுத்து அந்த யானையை பொக்லைன் எந்திர உதவியுடன் தூக்கி நிறுத்தினர். பின்பு அதற்கு சுமார் 150 கிலோ உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து உடல்நலம் தேறிய அந்த யானை நேற்று காலை சுமார் 6 மணி அளவில் வனப்பகுதிக்குள் சென்றது. அதனுடன் குட்டி யானையும் சேர்ந்து கொண்டது.

துரிதமாக பல்வேறு பகுதிகளில் இருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு கூட்டு சிகிச்சை மேற்கொண்டதன் அடிப்படையில் யானை உயிர் தப்பியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானை சுமார் 55 வயது உடையது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குட்டி ஈன்று உள்ளது. போதிய சத்துக்கள் இல்லாததால் திடீரென உடல்நிலை பாதித்து மயங்கி விழுந்துள்ளது. தற்போது யானை உடல்நிலை தேறி உள்ளது. இருப்பினும் தொடர்ந்து வனப்பகுதியில் அதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+