Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜண்டா வா.. சொந்தகாரன் வீட்டில் சூனிய பொம்மை! ராஜாமணிக்கு காத்திருந்த ட்விஸ்ட்.. கப்சிப் போலீஸ்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் முன்பகை காரணமாக மந்திரிக்கப்பட்ட விபூதி, குட்டிசாத்தான் பொம்மை மற்றும் பில்லி சூனியம் ஏவல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பொம்மை வைத்த பெண் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிய நிலையில், வேறொருவர் தன்னை மயக்கி பொம்மையை வைக்கச் சொன்னதாகவும், தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என அப்பெண் கூறியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜா (46). இவர் மெக்கானிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆர்த்தி. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஆர்த்தி மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது வீட்டருகே பார்த்தபோது வீட்டின் முன் பக்க ஜன்னல் வழியாக விபூதி அதிக அளவில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆர்த்தி அவரது கணவர் ராஜாவிடம் தகவல் தெரிவித்து வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை பாருங்கள் என்று கூறியுள்ளார்.

Dindigul crime Black magic CCTV

திண்டுக்கல் பில்லி சூனியம்

ராஜா சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது வீட்டின் ஜன்னல் வழியாக பெண் ஒருவர் விபூதி வீசி செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். விபூதி வீசிய பெண் அதே பகுதியை சேர்ந்த ராஜாமணி (வயது 52), ராஜாவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் பெண் ராஜா குடும்பத்தில் சகஜமாக பழகக்கூடிய பெண் என்பதும் தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். விபூதி உள்ள இடங்களில் வீட்டை சுத்தம் செய்யும் போது வீட்டுக்குள் குட்டிச்சாத்தான் பொம்மையை இருப்பதை கண்டு குடும்பமே அதிர்ச்சி அடைந்தது.

குட்டிசாத்தான் பொம்மை

பின்பு அந்தப் பெண்ணை அழைத்து ராஜா கேட்டதில் அதே பகுதியை சேர்ந்த பூக்கடை வைத்திருக்கும் மணி என்பவர் எனக்கும் ராஜாவிற்கும் முன்பகை உள்ளது. அதனால் அவரை பழிவாங்க நீ உதவ வேண்டும் என்று ராஜாமணியிடம் கூறியுள்ளார். கடந்த 20 நாட்களாக ராஜா வீட்டில் திருநீறு பில்லி சூனியம் வைக்க வேண்டும் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று பூக்கடை மணி ராஜாமணியை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப் பெண் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் நடவடிக்கை இல்லை

சம்பவம் நடந்து ஒரு வார காலமாகியும் போதிய ஆதாரங்கள் இருந்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. வீட்டில் மந்திரிக்கப்பட்ட விபூதி குட்டிச்சாத்தான் பொம்மை பில்லி சூனியம் செய்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக பேசி உள்ள ராஜாமணி தான் அவ்வாறு செய்யவில்லை எனக் கூறி மழுப்பினார். தொடர்ந்து ராஜா வற்புறுத்தி கேட்கவே மணி தான் கொண்டு வந்து அந்த பொம்மையை எனது கையில் கொடுத்தார் ஆனால் எப்படி அந்த வீட்டுக்கு போனேன் என்பதை எனக்கு தெரியவில்லை எனக்கூறி சமாளித்திருக்கிறார்.

மூடநம்பிக்கை குற்றம்

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. புகார் தொடர்பாக சிசிடிவி காட்சிகளோடு புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஏன் என கேள்வி எழுந்திருக்கிறது. அறிவியல் வளர்ந்து விட்ட நிலையில் மூடநம்பிக்கைகளில் மூழ்கித் திளைப்பவர்கள் ஒருபுறம் இருக்க இதுபோன்ற பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+