ஜெயில்லயே இருங்க.. லஞ்சம் வாங்கிய ED அதிகாரிக்கு ஜாமீன் மறுத்த திண்டுக்கல் கோர்ட்! அதிரடி உத்தரவு
திண்டுக்கல்: அரசு மருத்துவமனை டாக்டரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்நிலையில் தான் அங்கித் திவாரி ஜாமீன் மனுவை திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் சுரேஷ் பாபு. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு இருந்தது. இந்நிலையில் தான் தொடரப்பட்டது.

இந்நிலையில் தான் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அங்கித் திவாரி என்பவர் சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, ‛‛பிரதமர் அலுவலகத்தில் இருந்து உங்கள் மீதான விசாரணையை மீண்டும் விசாரிக்க உத்தரவு வந்துள்ளது. இதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் ரூ.3 கோடி லஞ்சம் தர வேண்டும்'' என சுரேஷ் பாபுவிடம், அங்கித் திவாரி கூறியுள்ளார். இதற்கு சுரேஷ் பாபு மறுத்தார். இதையடுத்து அங்கித் திவாரி இறங்கி வந்துள்ளார்.
அதாவது லஞ்சத்தை ரூ.3 கோடியில் இருந்து ரூ.51 லட்சமாக குறைத்தார் அங்கித் திவாரி. இதையடுத்து முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தையும் அவர் பெற்றார். இதையடுத்து கடந்த 1ம் தேதி அங்கித் திவாரி ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபுவிடம் வாங்கிவிட்டு காரில் புறப்பட்டார். அப்போது சுரேஷ் பாபு கொடுத்த புகாரில் அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த பணம், கார் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைடுத்து அவரிடம் 15 மணிநேரம் விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் மதுரை சிறையில் போலீசார் அடைத்தனர். அதோடு அவரது வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விடியவிடிய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் தான் அங்கித் திவாரி தனக்கு ஜாமீன் கோரி திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணை என்பது தொடக்க நிலையில் உள்ளது. இதனால் அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க கூடாது என தமிழக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட திண்டுக்கல் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து அதிரடியாக உத்தரவிட்டது.
-
காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications