2024 தேர்தல் வரும் பின்னே.. பழனி- கொடைக்கானல் ரோப் கார் திட்டம் வரும் முன்னே- அறிவித்த உடனே ஆய்வு!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாதலங்களான பழனி மற்றும் கொடைக்கானல் இடையிலான ரோப்கார் திட்டத்திற்கான ஆய்வுப் பணிகளை ஆஸ்திரிய நாட்டு தொழில்நுட்ப வல்லுனர்குழு ஆய்வு மேற்கொண்டது.

தமிழகத்தின் பழனி- கொடைக்கானல், ஸ்ரீநகர், ஸ்ரீசைலம் ஜோதிலிங்கம் கோவில் உள்ளிட்ட 18 இடங்களில் 90 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் சேவை தொடங்கப்படும் என அறிவித்தது மத்திய அரசு.

தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், திரிபுரா, அருணாசலப் பிரதேசம், மணிப்பூர் மாநிலங்களில் இந்த ரோப்கார் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் பழனி- கொடைக்கானல் மலைப் பகுதியில் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசின் அறிவிப்புகளில் இடம்பெற்ற நீண்டதொலைவு திட்டம் இது. கர்நாடகாவில் 7 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோப் கார் அமைக்கப்பட உள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு வெளியான உடனேயே பழனி- கொடைக்கானல் மலைப் பகுதிகளில் ரோப் கார் அமைக்கும் திட்டம் குறித்த ஆய்வு தொடங்கப்பட்டுவிட்டது. இதற்கான ஆய்வுப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பாக ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பர்னாடு நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் குழு ஆய்வு நடத்தியது. மார்கஸ், யார்டு ஆகிய இருவர் தலைமையில் இந்த ஆய்வு நடந்தது. அப்போது பழனி மலையில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளின் மேற்கு பகுதிகளை அவர்கள் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பழனி மலையில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவு வரையிலான கொடைக்கானல் மலைகள், ரோப்கார் நிலையம் அமையும் இடங்கள் ஆகியவை குறித்தும் இக்குழு ஆய்வு நடத்தியது. இந்த ஆஸ்திரியா குழுவின் ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை திண்டுக்கல் மண்டல பொறியாளர் சங்கர சுப்பிரமணி, உதவி பொறியாளர் ராஜசேகரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடத்தப்படுவதற்குள் இந்த ரோப் கார் திட்டத்தை செயல்வடிவம் கொண்டுவருவது என மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதனை வெளிப்படுத்தும் வகையிலேயே இன்று உடனடியாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications