அதே டீம்.. சர்ஜிக்கல் ஸ்டிரைக் வல்லுநர்களை லடாக் அனுப்பிய இந்தியா.. எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்!
லடாக்: பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவ வல்லுநர்களை தற்போது இந்தியா லடாக் எல்லைக்கு அனுப்பி உள்ளது. இதற்கு பின் நிறைய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
இந்தியா சீனா இடையில் லடாக் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எதுவும் பலன் அளிக்கவில்லை. இரண்டு நாட்டு பிரச்சனை கண்டிப்பாக பெரிதாக வாய்ப்புள்ளது என்றும் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
அதோடு லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. கல்வான், பாங்காங் திசோ, டெப்சாங் பகுதியில் சீனா தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இந்தியாவும் அங்கு பதிலுக்கு படைகளை குவித்து வருகிறது.

என்ன படை
இந்த நிலையில் பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவ வல்லுநர்களை தற்போது இந்தியா லடாக் எல்லைக்கு அனுப்பி உள்ளது. இதற்கு பின் நிறைய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் போர்ஸ் எனப்படும் சிறப்பு படையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆவர். இவர்கள் எப்போதும் முக்கியமான ஆபரேஷன் இருந்தால் மட்டுமே களமிறக்கப்படுவார்கள்.

லடாக் சென்றனர்
தற்போது இவர்கள் லடாக்கில் வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன் ஸ்பெஷல் போர்ஸ் வீரர்கள் லடாக் எல்லையில் களமிறக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதல் வீரர்கள் அங்கே களமிறக்கப்பட்டு உள்ளனர். அங்கே தற்போது அந்த வல்லுநர்கள் மற்றும் வீரர்கள் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் லடாக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

சர்ஜிக்கல் ஸ்டிரைக்
2017ல் பாகிஸ்தானில் இவர்களின் உதவி மற்றும் ஆலோசனையின் மூலம்தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாத தளங்கள் விமான தாக்குதல் மூலம் அடித்து நொறுக்கப்பட்டது. லடாக்கில் உள்ள சீனாவின் முகாம்களை தேவைப்பட்டால் இந்தியா அடித்து நொறுக்க நேரிடும். இதனால் அங்கு திட்டங்களை வகுக்கும் வகையில் தற்போது இந்த ஸ்பெஷல் போர்ஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

எந்த இடம்
முக்கியமாக இந்த படை கிழக்கு லடாக் பகுதியில் களமிறக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோருக்கும் தனி தனி ஆபரேஷன்கள் வழங்கப்பட்டு உள்ளது. சீனாவுடன் மோதல் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்று இவர்களுக்கு தனியாக திட்டங்கள் வழங்கப்பட்டு உள்ளது. இதனால் லடாக்கில் எப்போது வேண்டுமானாலும் அதிரடிகள் நடக்கலாம் என்று கூறுகிறார்கள்.

அதிரடி முடிவு
இந்தியாவிடம் மொத்தம் 12 ஸ்பெஷல் படைகள் உள்ளது. இந்த படைகள் எல்லாம் வெவ்வேறு பணிகளை, பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். கடல், வானம், மலை என்று பல நிலப்பரப்பை மையமாக வைத்து இவர்கள் இயங்குவார்கள். தற்போது மலைகளில் சிறப்பாக செயல்பட கூடிய ஸ்பெஷல் போர்ஸ்தான் லடாக் அனுப்பப்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
இனி "இவங்க" யாரும் பெட்ரோல் பங்கில் டீசலை வாங்க முடியாது.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications