திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திண்டுக்கல் நத்தம் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அடிதடி.. பறந்த நாற்காலிகள்.. பதற்றம்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக விழா கூட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே அடிதடி மற்றும் ரகளை ஏற்பட்டது. நாற்காலிகள் பறந்தது. இதனால் கட்சி உறுப்பினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுபவர் ஆண்டி அம்பலம் இவர் போன சட்டமன்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஷாஜகான் என்பவரை எதிர்த்து போட்டியிட்டார்.

திமுகவை சார்ந்த ஆண்டி அம்பலம் இவர் 2110 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். இந்த முறையும் திமுக தலைமை கழகம் ஆனது ஆண்டி அம்பலத்துக்கே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்துள்ளது. திமுக சார்பில் நத்தத்தில் போட்டியிடுகிறார்.

மனு ஏற்கப்படவில்லை

மனு ஏற்கப்படவில்லை

நத்தம் மேற்கு திமுக ஒன்றிய செயலாளராக இருப்பவர் ரத்தினகுமார் இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக திமுகவில் பொறுப்பு வகித்து வருகிறார். இவரும் நத்தம் தொகுதி சட்டமன்ற தொகுதிக்கு விருப்ப மனு அளித்து திமுக இவரது மனுவை ஏற்கவில்லை.

அறிமுக கூட்டம்

அறிமுக கூட்டம்

எனவே ஆத்திரத்தில் இருந்த ரத்தினகுமாரின் ஆதரவாளர்கள் இன்று நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற ஆரம்பித்த போது மோதலில் ஈடுபட்டனர். . கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் சக்கரபாணி தலைமை தாங்கி மேடையில் ஏற ஆரம்பித்தவுடன் ரத்தினகுமாரின் ஆதரவாளர்கள் மேடையில் வாக்குவாதம் செய்தனர்.

கைகலப்பு

கைகலப்பு

ஆண்டி அம்பலத்தின் ஆதரவாளர்களுக்கும் ரத்தினகுமார் ஆதரவாளர்களுக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பு நடந்தது. கூட்டத்திலிருந்த சேர் நாற்காலிகள் உள்ளிட்டவை பறக்க ஆரம்பித்தன. இதனால் மண்டபத்தில் கூடியிருந்த தொண்டர்கள் அலறியடித்து ஓட ஆரம்பித்து விட்டனர். திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அஇஅதிமுக வேட்பாளர்

அஇஅதிமுக வேட்பாளர்

இதனிடையே நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் இந்த முறை நத்தம் விஸ்வநாதன் போட்டியிடுகிறார். சென்ற முறை நத்தம் தொகுதியில் போட்டியிட இவருக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாய்ப்பு அளிக்கவில்லை. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியை ஒதுக்கினார். இதில் திமுகவின் ஐ பெரியசாமியே வெற்றி பெற்றார்

English summary
clash between andi ambalam vs rahtnakumar team at Dindigul district Natham assembly constituency DMK candidate inauguration ceremony.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X