திண்டுக்கல்லில் ரூ.1500 கோடியில் வளர்ச்சித் திட்டங்கள்.. முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ரூ. 1500 கோடியில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கவுள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே காலை 10 மணிக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் ஸ்டாலின் 222 புதிய பணிகள், 111 முடிவுற்ற பணிகள் என ரூ. 1595 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். 30 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் இயக்கப்படவுள்ள புதிய பேருந்துகளைத் தொடங்கிவைத்தார். 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கினார். பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். ரூ. 23 கோடி மதிப்பில் 61 புதிய பேருந்து சேவைகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல் வந்த முதல்வர் ஸ்டாலினை, அமைச்சர்கள் பெரியசாமி, அர.சக்கரபாணி, கலெக்டர் சரவணன், எம்.எல்.ஏ.க்கள் செந்தில்குமார், காந்திராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். திண்டுக்கல் - மதுரை சாலையில் பாண்டியராஜபுரம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் 38 கிலோ மீட்டர் தூரம் பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். முதல்வர் ஸ்டாலின் 6 இடங்களில் திமுகவினர், பொதுமக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டார்.
மேலும், தமிழக இந்து அறநிலையத் துறை, மின்சாரம், வருவாய்த்துறை உள்ளிட்ட ஏழு துறைகளை சார்ந்த 174.20 கோடி மதிப்பிலான 212 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், விழா மேடையில் வருவாய் துறை உள்ளிட்ட 18 துறைகள் மூலம் 2 லட்சத்து2, 62,864 பயனாளிகளுக்கு ரூபாய் 1000 கோடியே 82 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றினார்.
-
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
ஊரே ஒன்னு சேர்ந்து..செருப்பால் அடிச்சு! என்னங்க நடக்குது இங்க.. திருவிழானாலும் ஒரு நியாயம் வேண்டாமா? -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications