தேச துரோகம்.. சுந்தரவள்ளிய புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்! பரபர புகார்.. என்ன தான் சொன்னாங்க அவங்க?
திண்டுக்கல்: காஷ்மீர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் சுந்தரவள்ளி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக அவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளதாகவும், அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அளிக்கப்பட்டிருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. நான்கு பயங்கரவாதிகள் ராணுவ உடையில் வந்ததாகவும் மதத்தைக் கேட்டு கேட்டு ஒவ்வொருவரையும் சுட்டுக் கொன்றதாக தாக்குதலை நேரில் கண்ட ஒரு பெண் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் பலியானதாக கூறப்படும் நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் பயிற்சி பெற்றதாக வெளியான தகவல், இரு நாடுகளிடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்துள்ளது. அட்டாரி - வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற உத்தரவு என அடுத்தடுத்து பல அதிரடி நடவடிக்கைகளை இந்தியா எடுத்திருக்கிறது. மேலும் பாகிஸ்தானுக்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தப்படலாம் எனவும், தகவல் வெளியாகி உள்ளதால் நடைபெற்ற போது திராவிட இயக்க ஆதரவாளரான சுந்தரவல்லி தனது எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார்.
அதில், ராணுவத்தை பற்றியும் பாஜகவை பற்றியும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.
சுந்தரவள்ளியின் இந்த பதிவு ராணுவத்தையும் இந்திய இறையாண்மையையும் அவமதிப்பது போல் இருப்பதாகவும் இந்த தாக்குதலை திட்டமிட்டு இந்தியாவை கட்டவிழ்த்து விட்டதாக கூறுவது போல் இருப்பதாக கடும் கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து பலர் அவரது சமூக வலைதள பக்கத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் தொலைபேசி மூலமும் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுந்தரவள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மீது தேச துரோகச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி பிரமுகர் ஆன செந்தில்வேலு இது தொடர்பாக திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில்," ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் என்ற இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பாரத தேசத்தையும் இந்திய ராணுவத்தையும் உள்நோக்கத்தோடு இரு பிரிவினர் இடையே கலவரத்தை தூண்டும் விதமாக சுந்தரவள்ளி பதிவிட்டுள்ளார். அவரது பதிவு நாட்டுப்பற்றுள்ள அனைவருக்கும் மன வேதனையை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. சுந்தரவள்ளி பாரத தேசத்திற்கு எதிராகவும் ராணுவத்திற்கு எதிராகவும் ராணுவத்தை அவமதிக்கும் உள்நோக்கத்தோடு செயல்பட்டு இருக்கிறார். மேலும் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவிட்டுள்ளார். இதனால் அசாதாரணமான சூழல் உருவாகியுள்ளது. எனவே அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications