பவித்ரா இல்லாமல் வாழ முடியாது.. சுடுகாட்டில் மனைவியை புதைத்துவிட்டு.. தூக்கில் தொங்கிய கணவன்!
மனைவி இறந்த துக்கத்தில் கணவன் தற்கொலை செய்து கொண்டார்
திண்டுக்கல்: கணவன் - மனைவி இருவருமே கைக்குழந்தையை தவிக்க விட்டுவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி பகுதியை வீரணன்.. 25 வயதாகிறது.. இவர் ஒரு டெய்லர்.. இவரது மனைவி பவித்ரா.. 22 வயதாகிறது.

இவரும் அதே ஊரை சேர்ந்தவர்தான்.. 3 வருஷங்களுக்கு முன்பு கல்யாணம் ஆன இவர்களுக்கு ஒன்றரை வயதில் பவிக்ஷா என்ற பெண் இருந்தை இருக்கிறாள்.
இந்நிலையில், பவித்ராவுக்கு சில காலமாகவே வயிற்று வலி இருந்து வந்துள்ளது.. எங்கெங்கோ மருத்துவம் பார்த்தும் வயிறு வலி குணமாகவில்லை.. அதே சமயம் வலியையும் பொறுத்து கொள்ள முடியாமல் பவித்ரா துடித்து வந்தார்.
நேற்று முன்தினம் வயிற்றுவலி அதிகமாகிவிட்டது.. வலியால் கதறிய அவர், அதற்கு மேல் தாங்க முடியாமல் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவியின் சடலத்தை பார்த்து வீரணன் கதறி அழுதார்.. பின்னர், அவரது உடலை ஊர்மக்கள், குடும்பத்தினர் உதவியுடன் சுடுகாட்டில் அடக்கம் செய்து விட்டு வீட்டுக்கு வந்தார் வீரணன்.
ஆனால் அவரால் ஒரு இடத்தில் நிலைகொள்ள முடியவில்லை.. பவித்ராவின் மரணம் அவரை நிலைகுலைய வைத்திருந்தது.. அதனால் அன்றைய தினம் இரவே வீட்டு பக்கத்தில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த இரு தற்கொலைகள் சம்பந்தமாக விளாம்பட்டி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
-
கல்லூரி மாணவி குளிப்பதை ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தவெக நிர்வாகி கைது -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
மூக்கு சிகிச்சை.. பறிபோன உயிர்! மயக்க மருந்தால் மங்கிய கனவு! சொந்த ஊருக்கு சென்ற நர்சிங் மாணவி உடல்! -
விஜய் ஆட்சியிலும் காவல்துறை அத்துமீறல்! தென்காசியில் போலீஸ் தாக்கியதில்.. விவசாயி சோக முடிவு! -
பாதுகாப்பு கேட்டு போலீஸுக்கு போனா..போலீஸ்கிட்ட இருந்தே பாதுகாக்கனும் போல! எக்குத்தப்பு SI-க்கு பாடம் -
கோவையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் உடல்.. சொந்த ஊரில் தகனம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு!












Click it and Unblock the Notifications