பாலுபாரதிக்கு கள்ளக் காதல்..10 வயது சிறுமியிடம் சில்மிஷம்.. கம்பி எண்ணும் கம்யூனிஸ்ட் பிரமுகர்.!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் தாயுடனும் அவர் முறையற்ற உறவில் இருந்தது தெரிய வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது போல் தற்போது தமிழகத்தில் இந்த கொடூரங்கள் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
சிறுமிகளை தெரியாதவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவத்தால் வெளியே அனுப்ப பெற்றோர் தயங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் நபர்களே பிஞ்சு மழலைகளிடமும், சிறுமிகளிடமும் அத்து மீறுவதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் அரங்கேறியுள்ளது. பெண் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் ஒருவர் அப்பெண்ணின் 10 வயது மகளிடம் அத்துமீற தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி(வயது 45)சி.பி.ஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினராக உள்ளார் இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவருக்கும் குஜிலியம்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.
அந்தப் பெண்ணிற்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலி வீட்டில் இல்லாத போது பாலுபாரதி 10 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் கடந்த 2 மாதங்களாக பாலுபாரதி அடிக்கடி வீட்டுக்கு வந்து தாங்க முடியாத அளவுக்கு கொடுமை செய்து வந்துள்ளார். அளவுக்கு அதிகமான போதையில், சிறுமிக்கு தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றிருக்கிறது.

தான் சொல்வதைக் கேட்டு சிறுமி நடந்து கொள்ள வேண்டும் எனவும், தனக்கு ஒத்துழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியில் சொன்னாலோ, தனது பேச்சை கேட்கவில்லை என்றாலோ சிறுமியை கொன்று விடுவோம் என்றும் அந்த நபர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. பல நாட்களாக கொடுமை தொடர்ந்த நிலையில் சிறுமியின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரியவே அவரது தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது தனக்கு நடந்தவற்றை சிறுமி கண்ணீருடன் தனது தாயிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இது குறித்து வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா பாலுபாரதியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.












Click it and Unblock the Notifications