பழனி முருகனை தரிசிக்க சென்றவருக்கு சோகம்.. வரிசையில் நின்றபோது இப்படியா நடக்கனும்.. உயிரே போச்சு
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் தரிசனத்துக்கு சென்ற பக்தர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். ஏற்கனவே திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோவிலில் அடுத்தடுத்து பக்தர்கள் இறந்த நிலையில் இன்று பழனி மலைக்கோவிலில் பக்தர் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றதாக உள்ளது. இந்த கோவிலுக்கும் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் தான் இன்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர் ஒருவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக உடனிடயாக அவர் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அந்த நபருக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் பலியானார். விசாரணையில் நெஞ்சு வலியால் இறந்த நபர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த செல்வமணி என்பது தெரியவந்தது. மேலும் செல்வமணி தனது பகுதியை சேர்ந்தவர்களுடன் கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
ஐயப்பன் தரிசனத்தை முடித்தபிறகு செல்வமணி தான் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று அனைத்து பக்தர்களையும் அழைத்து கொண்டு வந்துள்ளர். இன்று செல்வமணி உள்பட அவருடன் வந்தவர் படிக்கட்டு வழியாக கோவிலுக்கு மேல் ஏறியுள்ளனர். அதன்பிறகு தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்தபோது செல்வமணி மாரடைப்பு ஏற்பட்டு பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக திருச்செந்தூர். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 16 ம் தேதி சாமி தரிசனத்துக்கு சென்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவர் மூச்சுத்திணறல் காரணமாக பலியானார். அதன்பிறகு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் தரிசனத்துக்கு சென்ற ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்தாஸ் என்பவர் இறந்தார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று பழனி முருகன் கோவிலில் செல்வமணி பலியாகி உள்ளார்.
கடந்த 4 நாளில் மட்டும் தமிழகத்தில் உள்ள முக்கிய 3 கோவில்களில் 3 பக்தர்கள் இறந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோவில்களில் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை என்பது இப்போது வலுத்துள்ளது.












Click it and Unblock the Notifications