Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முறைகேடா? இந்து அமைப்பு என கூறி அபிராமி அம்மனுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி! அறங்காவலர் பரபர புகார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: புகழ்பெற்ற திண்டுக்கல் அபிராமி அம்மனுக்கு எதிராக அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும், கோவில் மரியாதையை கெடுக்கும் வகையில் சிலர் முயற்சி செய்து வருகின்றனர் எனவும், கும்பாபிஷேக புனரமைப்பு பணியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதாக ஆதாரம் இன்றி குற்றம் சாட்டி, தன் சுய விளம்பரத்திற்காக திருக்கோவில் பெயருக்கு களங்கம் விளைவித்து வருவதாக திருக்கோயில் அறங்காவலர் வீரக்குமார் கூறியுள்ளார்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் தமிழகத்தின் புகழ்பெற்ற பல கோவில்கள் செயல்பட்டு வருகிறது. அந்த கோவில்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்காக மன்னர் காலங்களில் இருந்தே ஏராளமான நிலங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கிடையே இந்து அமைப்புகள் என கூறிக் கொண்டு சிலர், கோவில் திருப்பணியில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், ஆகம விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என புகார் அளித்து வருகின்றனர்.

Dindigul Temple HRNC

இந்நிலையில், தன் சுய விளம்பரத்திற்காக திருக்கோவில் பெயருக்கு களங்கம் விளைவித்து வருவதாக திருக்கோயில் அறங்காவலர் வீரக்குமார் கூறியுள்ளார். திண்டுக்கல் மாநகரில் 400 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த அருள்மிகு பத்மகிரீஸ்வரர் உடனமர் ஸ்ரீ அபிராமி அம்மன், காளகத்தீஸ்வரர் உடனமர் ஞானாம்பிகை திருக்கோயிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வாக வரும் 9.5.2025 அன்று சுவாமிகளின் திருத்தேர் பவனி நடைபெறும்.

அதனை முன்னிட்டு இன்று 2.5.25 கோவிலில் அபிராமி அம்மன் முன்பு திருத்தேரில் முகூர்த்தக்கால் பூஜை செய்யப்பட்டு தேர் முட்டி கொண்டு வந்தனர். 60 அடி உயரம் கொண்ட இத்தேர் நகரின் நான்கு ரத வீதிகளில் உலா வரும். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயலர் தங்க லதா மற்றும் அகங்காவலர்கள் செய்திருந்தனர்.

தொடர்ந்து அறங்காவலர் வீரகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்," அபிராமி அம்மனுக்கு எதிராக பல்வேறு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், கோவில் மரியாதையை கெடுக்கும் வகையில் சிலர் முயற்சி செய்து வருகின்றனர். இது இறைவனின் பணி. அனைவரும் இணைந்து தான் இந்த சேவையில் பயணித்து உள்ளோமே தவிர தனிப்பட்ட நபர்களை குற்றம் சொல்வதென்றால் நேரடியாக சொல்வது சிறந்தது. திண்டுக்கல் மக்கள் அபிராமி கொண்டாடி வருகின்றனர். அறங்காவலர்கள் பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆகின்றன. 1962 இல் இருந்து அபிராமி அம்மன் கோவில் சார்பாக திண்டுக்கல் மாவட்டம் சுற்றி உள்ள கோயில்களுக்கு நிதி உதவி மற்றும் பொருள் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேபோல் அபிராமி அம்மன் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்கள் தற்போது மீட்கப்பட்டு வருகின்றன. நகரின் முக்கிய நபர்கள் சிலர் கோவிலுக்கு சொந்தமான சொத்தை தங்கள் பெயரில் பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர். அதையும் மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை அறிந்த இந்து தமிழ் கட்சி என்று சொல்லிக் கொண்டு உள்ள நபர் மூலம் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் தவறான புகார் அளித்துள்ளார்.

அபிராமி அம்மன் கோவில் கும்பாபிஷேக புனரமைப்பு பணியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றதாக ஆதாரம் இன்றி குற்றம் சாட்டி தன் சுய விளம்பரத்திற்காக திருக்கோவில் பெயருக்கு களங்கம் விளைவித்து வருகிறார். பழனி சட்டமன்ற உறுப்பினர் பெயரை பயன்படுத்துவது யார் என்பது அவருக்கு நன்றாக தெரியும். அவருடைய பெயரை பயன்படுத்தக்கூடிய நபரை எங்கே வைக்க வேண்டும் அவருக்குத் தெரியும். கூட இருந்து அரசியல் செய்பவர்களை எங்கு வைக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும்.

கோயில் சொத்துக்களை மீட்டு எடுப்பதற்கு எந்த வகையில் இடையூறு ஏற்படுத்தினாலும் கோவில் சொத்துக்களை மீட்டு எடுப்பதில் கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர்கள் உறுதியாக உள்ளோம். அபிராமி அம்மன் கோவிலில் ஊழல் நடைபெறுவதாக கூறும் நபர்களுக்கு பொது மக்களுக்கும் எப்போது வேண்டுமானாலும் கணக்கு வழக்குகளை எப்போது வேண்டுமானாலும் காட்ட கடமைபட்டு உள்ளோம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+