திண்டுக்கல்லார் ஒரே போடு.. பாஜகவுக்கு தலையே சுத்திடுச்சு.. மீண்டும் திண்டுக்கல் சீனிவாசன் அடடா அடடா
திண்டுக்கல்: மூத்த தலைவர் திண்டுக்கல் சீனிவாசன் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டிங்காகி உள்ளது.. திண்டுக்கல்லே அசந்துபோகும்படி அப்படி பேசினார் முன்னாள் அமைச்சர்?
முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை பொறுத்தவரை, சர்ச்சைகளுக்கு பெயர்போனவர்.. சில சமயம் இவரது பேச்சுக்கள், செல்லூர் ராஜுவையே ஓவர்டேக் செய்துவிடும்.

கடந்த ஆட்சி காலத்தில், இவர்கள் 2 பேரும் மாறி மாறி சர்ச்சைகளில் சிக்கினாலும்,, பொதுமக்கள் எல்லாவற்றையும் ஈஸியாக எடுத்து கொள்ள பழகிவிட்டனர் போலும். காரணம், 2 பேருமே வெள்ளந்திகள்.. மனசில் எதையும் வைக்காமல் பேசுபவர்கள் என்பதால்தான்.
கோட்சே வாரிசு: அவ்வளவு ஏன்? ஒருமுறை திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் திமுகவை விமர்சித்து கொண்டிருந்தபோது, "இயேசுநாதரை சுட்ட கோட்சே வாரிசு" என்றார்.. இதைக்கேட்டதுமே மேடையிலிருந்தவர்கள் திடுக்கிட்டு போனார்கள்.
அதேபோல ஒருமுறை குஜிலியம்பாறை புளியம்பட்டியில் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது, ஒருபழமொழியை சொல்ல கடுமையாக முயற்சி செய்தார்.. "கூரை ஏறி கோழி பிடிக்காதவன், கூரை ஏறி வைகுண்டத்திற்கு போன மாதிரி" என்றார்.. பிறகு மேடையில் இருந்த கட்சி நிர்வாகிகள், பழமொழியை திருத்தி அமைச்சருக்கு சொல்லி கொடுத்தனர். உடனே அமைச்சர், "கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வைகுண்டம் ஏறி" என்று மறுபடியும் குழப்பினார்.
கூரை ஏறி: ஆனாலும் கட்சியினர் விடவில்லையே.. மறுபடியும் பழமொழியை சரியாக திருத்தி சொல்லி தந்தனர்.. கடைசியாக, 3வது முறையாக "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்" என்று தட்டுத்தடுமாறி சொல்லி முடிக்கவும், கைதட்டல் விண்ணையே பிளந்து கொண்டு போனது..!
இதோ இப்போதும் ஒரு புதுகுண்டு தூக்கி போட்டுள்ளார் திண்டுக்கல்லார்.. பட்டியலினத்து பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்எல்ஏ-வான கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
திண்டுக்கல்லில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். வழக்கமாக திமுகவை விமர்சித்து பேசுபவர், இந்த முறை பாஜகவையும் சேர்த்து, கடுமையாக விமர்சித்தார்.
பேட்டி: பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது, "எடப்பாடி பழனிசாமி ஆதரவு இருந்ததால்தான், ஓபிஎஸ் வேட்டி கட்டி வெளியே வர முடிந்தது. ஆனால் இப்போது, தெய்வம் தந்த தண்டனையால் அவரால் அதிமுக வேட்டியைக்கூட கட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் பேசுவதை எல்லாம் கணக்கிலேயே எடுத்துக்கொள்ள வேண்டாம். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை.
பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே, "மோடியா... லேடியா?" என்று பிரச்சாரம் செய்து தேர்தலை சந்தித்தவர் ஜெயலலிதா. 37 எம்பி-க்களை மக்கள் அதிமுகவுக்கு தந்தார்கள்.. இந்த முறை எடப்பாடி தலைமைக்கு 39 எம்பி-க்கள் கிடைக்கும்" என்றார் திண்டுக்கல் சீனிவாசன்.
ஒரே போடு: குடியுரிமை திருத்த சட்டத்தை அதிமுக ஆதரிக்குமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "இது தொடர்பான நிலைப்பாடுகளை எங்கள் பொதுச்செயலாளர், புரட்சித்தலைவர் அண்ணாமலை ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு உள்ளார்" என்று ஒரே போடாக போட்டார்.
என்னாது, அதிமுக பொதுச்செயலாளர் அண்ணாமலையா? என்று அங்கிருந்த அதிமுக நிர்வாகிகளி அதிர்ச்சியடைந்து விழித்தபடியே நின்றனர். திண்டுக்கல்லால் சீரியஸாக தந்த இந்த பேட்டியின் வீடியோதான் இணையத்தில் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது.
-
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஒரேயொரு இஸ்லாமியர்.. 150 பேர் லிஸ்டில் ஒருவருக்கு மட்டுமே சீட்! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்!












Click it and Unblock the Notifications