பிஷப்பா? கிறிஸ்தவ வன்னியர் சங்க தலைவரா? திண்டுக்கல் ஆயர் தாமஸ் பால்சாமிக்கு எதிர்ப்பு? கடும் கண்டனம்
திண்டுக்கல்: பரபரப்பில் இருக்கிறது திண்டுக்கல் மாவட்டம். திண்டுக்கல் கிறிஸ்தவ மாவட்ட ஆயரான தாமஸ் பால்சாமி மீது சர்ச்சை வளையம் சூழ்ந்து இருக்கிறது. திண்டுக்கல் மறை மாவட்டத்திற்கு தலைவரான அவர் குறிப்பிட்ட ஒரு சாதிக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கிறிஸ்தவ வன்னியர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என அவர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் ஆயரா? இல்லை வன்னியர் சங்கத்தின் தலைவரா? என்ற கேள்வி எழுந்திருப்பதாக விமர்சிக்கின்றனர்.
திண்டுக்கல் மறை மாவட்டத்தின் ஆயராக (பிஷப்) தாமஸ் பால்சாமி பணியாற்றி வருகிறார். திருச்சி மறை மாவட்டத்தின் முதன்மை குருவாக பணியாற்றிய அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட பிஷப்பாக பதவி ஏற்றார்.
திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட அவர் திருச்சியில் பல்வேறு பகுதிகளில் பங்கு தந்தையாக பணியாற்றினார். 2003இல் திண்டுக்கல் மதுரை மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில் முதல் ஆயராக அந்தோணி பால்சாமி நியமிக்கப்பட்டார்.

தாமஸ் பால்சாமி:
அவர் மதுரை உயர் மறை மாவட்ட பேராயராக மாற்றப்பட்ட நிலையில் அதற்கு பிறகு தாமஸ் பால்சாமி திண்டுக்கல் மதுரை மாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் தற்போது அவரை சுற்றி சர்ச்சை எழுந்திருக்கிறது. திண்டுக்கல் மறை மாவட்டத்தின் கீழ் 49 பங்குகளும், 163 அருள் பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் சில பங்கு கிறிஸ்தவ வன்னியர்கள் கொண்ட பங்குகளாக இருக்கிறது. பிற பங்குகளில் தலித் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல சாதியினர் அடங்கிய பங்குகளாக இருக்கிறது.
கிறிஸ்தவ வன்னியர்கள்:
இந்த நிலையில் திண்டுக்கல் மதுரை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக விமர்சனம் எழுந்திருக்கிறது. தற்போது திண்டுக்கல் மறை மாவட்ட ஆயராக இருக்கும் தாமஸ் பால்சாமி, தமிழ்நாடு ஆயர் பேரவையின் பிசி, எம்பி, டிஎன்சி பணிக்குழுவின் தலைவராக இருக்கிறார். இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் நேற்று கிறிஸ்தவ வன்னியர்களுக்கு எம்பிசி சலுகை வழங்க வேண்டும் என ஊர் பெரியவர்கள், சமூக தலைவர்கள் உடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

எம்பிசி இடஒதுக்கீடு:
தொடர்ந்து திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இதில் தாமஸ் பால்சாமி தலைமையில் ஏராளமான கிறிஸ்தவ வன்னியர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தாமஸ் பால்சாமி," தமிழகம் முழுவதும் சுமார் 5 முதல் 6 லட்சம் கிறிஸ்தவ வன்னியர்கள் உள்ளனர். தற்போது வரை அனைத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.
ஆயர் போராட்டம்:
இந்து வன்னியர்களுக்கு வழங்கியது போல் கிறிஸ்தவ வன்னியர்களையும் MBC பட்டியலில் இணைக்க வேண்டும் என தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எங்களது மக்களை கண்டுகொள்வது இல்லை. கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது வடமதுரையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் இணைப்பதற்கு பரிந்துரை செய்வோம் என தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
தமிழக அரசு:
இந்நிலையில் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு செல்வதற்கு தற்போது ஆலோசனை கூட்டம் நடத்தி உள்ளோம் . இதில் வரும் மே மாதம் திண்டுக்கல் அருகே மாநாடு நடத்தப்படும். அதன் பிறகு தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.

MBC பட்டியல்:
தமிழக முதல்வர் ஸ்டாலின் கிறிஸ்தவ வன்னியர்களை MBC பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என தினசரி நாளிதழில் முதல்வர் திண்டுக்கல்லில் தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளித்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் இந்து வன்னியர்களுக்கு நாங்கள் எதிரி இல்லை அவர்களைப் போல் நாங்களும் மிகவும் பின்தங்கி உள்ளோம். எங்களுக்கு எங்கள் உரிமை வேண்டும்" என்றார்.
கடும் கண்டனம்:
இந்நிலையில் ஆயரின் இந்த செயலுக்கு கிறிஸ்தவர்களிடையே கடும் கண்டனம் எழுந்திருக்கிறது. ஒரு சாதி சங்கத்தின் தலைவர் போல ஆயர் தாமஸ் பால்சாமி செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு இழந்திருக்கிறது. ஆயர் தாமஸ் பால்சாமி ஆயர் பேரவையின் பிசி, எம்பிசி, டிஎன்சி குழு தலைவராக இருக்கிறார். அந்த குழுவை பொறுத்தவரை அந்த பிரிவை சேர்ந்த மக்களுக்கு தர வேண்டிய சலுகைகள், பயனாளிகள் உள்ளிட்டவற்றை தேர்ந்தெடுப்பது அவர்களுக்கு செல்ல வேண்டிய நலத்திட்டங்கள், உதவிகள், செல்கிறதா என்பதை கண்காணிப்பதும் அதனை உறுதி செய்வதும் தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு நேரடியாக போராட்டம் ஆர்ப்பாட்டம் என இறங்கி செய்வது நியாயம் இல்லை என குற்றம் சாட்டுகின்றனர்.
கிறிஸ்தவ சாதியியல்:
இது தொடர்பாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மைதீன் பாவா," தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால் இதுவரை அதற்கு குரல் கொடுக்காத ஆயர் தற்போது குறிப்பிட்ட சாதியினருக்கு சலுகை வழங்க வேண்டும் அவர்களை எம்பிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என பேசுவது நியாயமற்றது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிறிஸ்தவ பிரிவு நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என கூறியிருக்கிறார்.
திருச்சபை சர்ச்சை:
"ஆயர்கள் பொதுவாக நேரடியாக வாடிகன் சிட்டியின் நேரடி கட்டுப்பாட்டில் நியமிக்கப்படுகிறார்கள். கத்தோலிக்க திருச்சபையின் போப் அவர்களை நியமனம் செய்கிறார். அப்படி இருக்க திண்டுக்கல் மறை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து சாதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்களுக்கு தலைவர் என்றால் பிஷப் தான். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது. முதலமைச்சர் எம்பி, எம்எல்ஏக்கள் போல ஆயர் கிறிஸ்தவ மக்களின் பிரதிநிதி. அவர் குறிப்பிட்ட ஒரு சமூக மக்களின் கோரிக்கைக்கு குரல் கொடுப்பதும் அல்லது அதற்கு ஆதரவாக பேசுவதும் நியாயமானது. ஆனால் சாதி அமைப்பு போல நேரடியாக ஆர்ப்பாட்டம் போராட்டம் என இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்கிறார் திண்டுக்கல் திருச்சபையைச் சேர்ந்த ரொசாரியோ.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications