3 லட்சம் அள்ளித் தரும் ’கேகேடி’..புதிய தொழில் செய்ய நினைப்போருக்கு சூப்பர் சான்ஸ்! அசத்தல் அறிவிப்பு
திண்டுக்கல்: கலைஞர் கைவினைத் திட்டம் மூலம் 25 சதவீதம் மானியத்துடன் ரூ.50,000 முதல் அதிகபட்சமாக ரூ.3,00,000 வரை வங்கி கடன் உதவியும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும் நிலையில், கடனுதவி பெற கைவினை கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி கூறியுள்ளார். மேலும், இதற்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைவினை கலைஞர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் நோக்கத்துடனும் "கலைஞர் கைவினைத் திட்டம் (KKT) " என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அரசு ஆணை எண். 64, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நாள்: 06.12.2024-இல் வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் கைவினை கலைஞர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவியும் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படும் என மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கலைஞர் கைவினைத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.50,000 வரை 25 சதவீதம் மானியத்துடன் ரூ.3,00,000 வரை வங்கி கடன் உதவியும், 5 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். கைவினைத் தொழில் மற்றும் கைவினைக் கலைகளில் ஈடுபட்டு வரும் மக்கள் பயனடையும் வகையில், புதிய தொழில் தொடங்கவும், செய்யும் தொழிலை விரிவாக்கம் செய்திடவும் கடனுதவி வழங்கப்படும்.
கட்டட வேலைகள், மர வேலைப்பாடுகள், பாரம்பரிய முறையில் ஜவுளி அச்சிடுதல், தோல் கைவினைபொருட்கள், காலணிகள் தயாரித்தல், மீன் வலை தயாரித்தல், நகை செய்தல், சிகையலங்காரம், அழகுக்கலை, துணி நெய்தல், துணிகளில் கலை வேலைப்பாடுகள், பூட்டு தயாரித்தல், தையல் வேலை, கூடை பின்னுதல், கயிறு, பாய் பின்னுதல், துடைப்பான் செய்தல், மண் பாண்டங்கள் சுடு மண் வேலைகள், பொம்மை தயாரித்தல், படகுக் கட்டுமானம், துணி வெளுத்தல், சிற்ப வேலைப்பாடுகள், கற்சிலை வடித்தல், ஓவியம் வரைதல், வண்ணம் பூசுதல், கண்ணாடி வேலைப்பாடுகள், பாரம்பரிய இசைக்கருவிகள் தயாரித்தல், மலர் வேலைப்பாடுகள், உலோக வேலைப்பாடுகள், பாசிமணி வேலைப்பாடுகள், பழங்குடியினரின் இயற்கை சேகரிப்புகள், கைவினைப் பொருட்கள், மூங்கில், பிரம்பு, சணல், பனை ஓலை வேலைப்பாடுகள் போன்ற 25 வகையான கைவினைத் தொழில்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தகுதியுடைய தொழில்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேற்காணும் தொழிலில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு, “பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, திண்டுக்கல்“ என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி எண் 0451-2471609, கைப்பேசி எண் 8925533943 ஆகிய எண்கள் வாயிலாகவோ சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது. எனவே தொழில் செய்ய விரும்பு கைவினைக் கலைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications