Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமனாரை கவிழ்த்த மருமகள்.. அது யாரு இன்னொரு தாத்தா? திண்டுக்கல் திணறுது போங்க.. குஜிலியம்பாறை கேவலம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் குஜிலியம்பாறையில் ஒரே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.. பலகால நண்பர்கள் 2 பேரும் சேர்ந்து செய்த காரியம், பொதுமக்களை பதற வைத்து வருகிறது.. இது சம்பந்தமான விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். அப்படி என்ன நடந்தது?

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே மருமகளுடனான கள்ளக்காதலில் ஏற்பட்ட போட்டியால் முதியவர் அடித்து கொன்று எரிக்கப்பட்டார். இதுதொடர்பாக மற்றொரு முதியவரை போலீசார் கைது செய்தனர்.

gujiliamparai daughter in law

ரங்கசாமி: திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை சேர்வைகாரன்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி.. கூலித்தொழிலாளியான இவருக்கு 72 வயதாகிறது.. இவரது மனைவி இறந்துவிட்டார். இவர்களது மகன்கள், மகள் அனைவருக்குமே திருமணமாகிவிட்டது.. அனைவருமே கோவையில் வசித்து வருகிறார்கள்.

ரங்கசாமி மட்டும் சேர்வைக்காரன்பட்டியில் தனியாக வசித்து வந்தார்... இந்நிலையில், கடந்த 2தேதி முதல் ரங்கசாமியை காணவில்லை.. இதனால் அவரது மகன் யுவராஜா (40) பதற்றமடைந்து, எங்கெங்கோ அப்பாவை தேடிப்பார்த்தார்.. ஆனால் அவர் கிடைக்கவில்லை.. எனவே, 17ம் தேதி குஜிலியம்பாறை போலீசில் இது தொடர்பாக புகார் செய்தார். போலீசாரும் காணாமல் போன ரங்கசாமியை தேடி வந்தனர்..

விஏஓ கலையரசி: இந்த நிலையில் குஜிலியம்பாறை தனியார் மருத்துவமனையில் செக்யூரிட்டியாக வேலைபார்க்கும் 64 வயதான கோவிந்தராஜ், திடீரென பாளையம் விஏஓ கலையரசியிடம் சென்று, ரங்கசாமி தனக்கு நண்பர்தான் என்றும், அவரை தான்தான் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து போலீசார் கோவிந்தராஜிடம் விசாரணையை மேற்கொண்டபோதுதான் ரங்கசாமியின் கள்ளக்காதல் அம்பலமானது.

gujiliamparai daughter in law

அதாவது, பண்ணக்காரன்பட்டி தோட்டத்து வீட்டில் மகன் வடிவேல்குமார், மருமகள் ஈஸ்வரியுடன் கோவிந்தராஜ் வசித்து வந்துள்ளார்... இதில், கோவிந்தராஜூக்கும் ஈஸ்வரிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.. தன்னுடைய நண்பரை சந்திக்க கோவிந்தராஜ் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார் ரங்கசாமி.. அப்போது ரெங்கசாமிக்கும், ஈஸ்வரிக்குக்கும் கள்ளக்காதல் ஆரம்பமாகிவிட்டது.. ஒருகட்டத்தில் தனிமையில் வசித்து வந்த ரங்கசாமி வீட்டிற்கு, கணவர், குழந்தைகளுடன் ஈஸ்வரி சென்று விட்டார்.

கள்ளக்காதலி: தன்னுடைய கள்ளக்காதலியை பறித்து கொண்டதால், ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், ரங்கசாமியை கொலை செய்ய முடிவு செய்தார்.. எனினும், ஒருமுறை நேரடியாக இதுகுறித்து ரங்கசாமியிடம் பேசி முடிவெடுக்கலாம் என்று நினைத்து, ரங்கசாமியை தன்னுடைய வீட்டிற்கு சம்பவ தினத்தன்று வரவழைத்தார் கோவிந்தராஜ்.

அப்போது மருமகளுடான கள்ளக்காதல் குறித்து ரங்கசாமியிடம் பேசினார். ஆனால், இருவருக்குமே கடுமையான வாக்குவாதம் வெடித்தது.. ஒருகட்டத்தில் இருவரும் கைகலப்பில் இறங்கிவிட்டார்கள்.. ரங்கசாமியை கோவிந்தராஜ் தாக்க துவங்கினார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல், அங்கிருந்த சிமென்ட் தூணில் ரங்கசாமி தலையை வைத்து பயங்கரமாக மோதினார்.. இதில் ரங்கசாமி தலை நசுங்கி இறந்துவிட்டார்..

ஓடைக்கரை: உடனே அவரது சடலத்தை சாக்கில் மூட்டை கட்டி, அருகிலிருந்த வரட்டாற்று ஓடைக்கு கொண்டுசென்று எரித்துவிட்டாராம் கோவிந்தராஜ். இவ்வளவையும் போலீசாரிடம் வாக்குமூலமாக கோவிந்தராஜ் சொல்லி உள்ளார்.

மருமகளுக்காக மாமனார், ஒரு கொலையே செய்திருப்பது அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.. இதில் ஒருவருக்கு 64 வயது, இன்னொருவருக்கு 72 வயது..

கேவலம்: வயதில் மூத்தவர்கள் என்பதையும் மறந்து, மருமகள் என்பதையும் மறந்து, ஒரு பெண்ணுக்காக 2 தாத்தாவும் அடித்து கொண்டதும், கட்டிப்பிடித்து உருண்டு சண்டை போட்டு கொலை வரை சென்றதும், தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. ஒருவர் இறந்துவிட்டார், ஒருவர் ஜெயிலுக்கு போய்விட்டார்.. ஆனால், இந்த தாத்தாக்களையும் "கவிழ்த்த" அந்த பெண்ணை என்னவென்று சொல்வது???? அப்படின்னா அந்த பெண்ணுக்கெல்லாம் தண்டனை கிடையாதா???

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+