முகர்ந்து தான் பாக்கனுமோ.. கல்யாண வீட்டுக்காரர்களை கதற விடும் மல்லி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..
திண்டுக்கல்: இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆவதால் வசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் திருமண வீட்டார் விலையைக் கேட்டதும் சற்றே ஷாக் ஆகி, வேறு என்ன செய்வது என வாங்கிச் செல்கின்றனர்.
திண்டுக்கல் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பூ வணிக வளாகத்திற்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, நத்தம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

மேலும் இங்கிருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர்,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தினசரி பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலேயே தோவாளைக்கு அடுத்தப்படியாக பூ மார்க்கெட்டிற்கு பெயர் பெற்ற திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை உதிரி பூக்கள் ரூ.1,000 வரை விலை போகிறது. இதற்கு காரணம் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் நாளை மறுநாள் 2 தினங்களுமே முகூர்த்த நாள் என்பதேயாகும். அதுமட்டுமல்ல கடும் மழை மற்றும் இரவு நேரங்களில் பனிப் பொழிவால் மல்லிகை பூ சாகுபடியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு மல்லிகை பூவின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

மல்லிகைப் பூ எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதை வாங்கித் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கல்யாண வீட்டுக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மணப்பெண் மல்லிகைப் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்ற சூழலில் விலை அதிகமாக இருந்தாலும் அதனை திருமண வீட்டுக்காரர்கள் மார்க்கெட்டிற்கே சென்று கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா என பல சுபநிகழ்ச்சிகளுக்கும் மல்லிகை பூ அவசியம் தேவை என்பதால் அதன் விலை குறைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

ஆவணி மாதம் முழுவதும் ஏராளமான சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் மல்லிகை பூவின் விலை குறைய வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் விலை உயர்வாகவே இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள். தற்போதைய சூழலில் திண்டுக்கல் மார்க்கெட்டில், மல்லிகை பூ கிலோ-1000, முல்லைப்பூ கிலோ-600, கனகாம்பரம் கிலோ-1000, காக்கரட்டான் கிலோ-350, ஜாதிபூ கிலோ -450 விற்பனையாகிறது.

இதேபோல்.. அரளிப்பூ கிலோ- 150, சம்பங்கி கிலோ- 200, பட்டன் ரோஜா கிலோ-120 , பன்னீர் ரோஜா கிலோ-80, செவ்வந்திப் பூ கிலோ-180, செண்டுமல்லி கிலோ-20 விரிச்சிப்பு கிலோ-120 வாடாமல்லி கிலோ-10 கோழிக்கொண்டை-30 ரூபாய்க்கு என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குறைந்தபட்சமாக வாடாமல்லி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை இந்தாண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கொண்டாடப்படாது என்பதன் காரணமாக வாடாமல்லி, செண்டு மல்லி உள்ளிட்ட அத்தப்பூ கோலத்துக்கு பயன்படுத்தப்படும் பூக்களின் விலை மட்டும் சற்றே குறைந்துள்ளது..

-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications