காதல்..கர்ப்பம்..கலைப்பு! காவ்யாவை கழற்றி விட்ட அருண்..வீட்டுமுன் விபரீத முடிவு..வீடியோ வந்துருச்சே!
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றியதால் காதலன் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்த இளம்பெண், காவல்துறையினர் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.
நவீன செல்ஃபோன் யுகத்தில் காதல் என்றால் ஏதோ டைம் பாஸ் போல என நினைத்து இளைஞர்களும் இளம்பெண்களும் விழுந்து அதில் மீள முடியாமல் சிக்கிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்களை கவலை கொள்ள செய்துள்ளது.

குறிப்பாக லிவ்-இன் உறவு மூலம் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்வது பின்னர் எல்லா தேவைகளும் முடிந்த பின் கழற்றி விடுவது பின் வேறொரு திருமணம் செய்து கொள்வது என இளைஞர்களின் போக்கு மாறி இருக்கிறது.
இளம்பெண்: இதனால் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள் தான்.. அப்படி காதலில் விழுந்து கர்ப்பமாகி காதலனால் ஏமாற்றப்பட்ட ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் நடைபெற்றிருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த, பட்டிவீரன்பட்டி அருகே, சாலைப்புதூரைச் சேர்ந்தவர் சுப்பையா இவரது மகள் கவ்யா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) பட்டதாரியான இவர், சென்னையில் தனியார் மருந்து நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இதே ஊரைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதனை ஆய்வாளராக (செக்கிங் இன்ஸ்பெக்டர்) பணியாற்றி வருபவர் முருகன். இவரது மகன் அருண்குமார் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
லிவ்-இன் உறவு: இந்நிலையில் அருண்குமாரும் காவ்யாவும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் ஒரே ஊரைச் சேர்ந்த இருவரும் சென்னையில் பணியாற்றி வருவதால், சென்னை குன்றத்தூரில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து கணவன் மனைவி போல் கடந்த ஒரு வருடமாக வாழ்ந்து வந்தனர். இதில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சூர்யா கர்ப்பமானதாக கூறப்படுகிறது.இதுகுறித்து அருண்குமாரின் பெற்றோருக்கு தெரிய வர, சென்னைக்கு விரைந்து சென்றுள்ளனர் உறவினர்கள்.
கருக்கலைப்பு: காவ்யாவுக்கு அவரது காதலனையே திருமணம் செய்து வைப்பதாகஆசை வார்த்தை கூறி, கருக்கலைப்பு செய்த பிறகு, சாலைப்புதூர் கிராமத்தில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என ஏமாற்றியுள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கடந்த ஏப்ரல் மாதம் கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், இருவரும் சொந்த ஊரான பட்டிவீரன்பட்டி அருகே, சாலைப்புதூர் கிராமத்திற்கு வந்துள்ளனர்.
தற்கொலை முயற்சி: இந்நிலையில், அருண்குமாருக்கு வேறு இடத்தில் திருமணம் செய்வதற்கு பெண் பார்த்து நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சூர்யா தான் ஏமாற்றப்பட்டதாக நினைத்து அருண்குமாரிடம் கேட்டபோது, திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டதாக கூறியுள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த சூர்யா புதன்கிழமை நேற்று இரவு காதலன் அருண்குமார் வீட்டு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.
விசாரணை: தகவல் அறிந்து சூர்யாவின் பெற்றோர்கள் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே காவல்துறை அதிகாரிகள் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் சூர்யா வீடியோ ஒன்றை பதிவு செய்து அதை தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications