போலீஸ் பாக்குற வேலையா இது? நடுராத்திரியில் சாட்டிங்.. மனைவியிடம் சீட்டிங்! இப்போ மொத்தமும் போச்சே!
திண்டுக்கல்: குடும்ப விவகாரங்களில் சிக்கி காவல் துறையினர் கைது செய்யப்படும் சம்பவங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததாக மனைவி புகார் அளித்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த தலைமை காவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இரவு நேரத்தில் பல பெண்களுடன் வாட்ஸாப்பில் ஆபாச சாட்டிங் செய்வதாகவும், ஆபாச புகைப்படங்களை வைத்திருந்ததாக மனைவி பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
சிவகங்கை அஜித்குமார் மரணத்திற்கு பிறகு தமிழகத்தில் காவல்துறை மீதான மக்களின் பார்வை மாறி இருக்கிறது. ஏதாவது ஒரு விவகாரத்தில் சிக்கி அடுத்தடுத்து காவலர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.
வரதட்சணை கொடுமை, போதையில் தகராறு என காவலர்கள் சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அப்படித் தான் மதுரை அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த பூபாலன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடூரமாக தாக்கியதாக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் காவலர் பூபாலன், அவரது தந்தையும் சாத்தூர் போக்குவரத்து காவல் ஆய்வாளரான செந்தில்குமரனுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி மீள்வதற்குள் திண்டுக்கல்லில் பல பெண்களுடன் தொடர்பில் இருந்த தலைமை காவலர், மனைவி அளித்த புகாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் திண்டுக்கல் சீலப்பாடி மகாலட்சுமி நகரை சேர்ந்த பார்த்திபன் (35). இவர் கடந்த வருடம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது திண்டுக்கல் இடையபட்டி சேர்ந்த வினோதினி (20) என்பருடன் திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆன ஒரு வாரத்திற்குள் பார்த்திபன் நடவடிக்கை சரியில்லாததால் வினோதினி கணவனின் செயல்பாட்டை கண்காணித்து வந்தார். அதில் பார்த்திபன் அடிக்கடி வாட்ஸ் ஆப்பில் பல பெண்களிடம் பேசுவது, ஆபாச புகைப்படங்களை வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கணவனின் குடும்பத்தாருக்கு ஆதாரங்களுடன் கூறிய போது இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் கணவன் குடும்பத்தார் வினோதினியை வீட்டை விட்டு விரட்டி அடித்தனர்.
இது குறித்து வினோதினி திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் பார்த்திபன் மற்றும் பார்த்திபனின் தாய் கண்ணம்மாள் உள்ளிட்ட 10 பேர் மீது ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் பார்த்திபன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கன்னிவாடி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் அடிதடி வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்டு முன் ஜாமீன் பெற்று கன்னிவாடி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்திட்டு வந்தார்.
இந்த நிலையில் மனைவி வினோதினி கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபனை ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி தலைமையிலான போலீசார் கைது செய்து திண்டுக்கல் மத்திய கிளை சிறையில் அடைத்தனர். பல பெண்களுடன் தொடர்பில் இருந்த தலைமை காவலர், மனைவி அளித்த புகாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications