கொடைக்கானலில் ‘கலர்புல்’ காய்கறி தமிழன்னை! காலுக்கு அடியில் கவனிச்சீங்களா? அலறியடித்து ஓடிய அதிகாரி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 59 வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா துவங்கியுள்ள நிலையில் காய்கறியால் ஆன தமிழன்னை சிலையின் காலுக்கு அடியில் முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வரின் உருவம் இருந்தது சர்ச்சையான நிலையில், அதனை தூக்கிக் கொண்டு அதிகாரி ஒருவர் ஓடிய சம்பவம் நடந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மலர் கண்காட்சிக்கு அரசு தடை விதித்தது, இதனையடுத்து கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இந்தாண்டு 59-வது மலர் கண்காட்சியானது 6 நாட்கள் விழாவாக துவங்க உள்ளது,

இன்று தொடங்கி 29 தேதி வரை மலர்கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பூங்காவில் லட்சக்கணக்கான மலர்கள் பல்வேறு வண்ணங்களில் பூத்து குலுங்குகின்றன.

கொடைக்கானல் கோடை விழா

கொடைக்கானல் கோடை விழா

மேலும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக இந்த வருடம் 13 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் உருவம் , 20 அடி நீளம் கொண்ட டைனோசர், சிங்சாங், ஸ்பைடர் மேன் மற்றும் கொய்மலர்களை கொண்டு தயார் செய்த மயில் மற்றும் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு உள்ளிட்ட உருவங்களை மலர்களால் அமைக்கும் பணியில் பிரையண்ட் பூங்கா ஊழியர்கள் தற்போது மும்மரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ் அன்னை

தமிழ் அன்னை

மேலும் காய்கறிகளை கொண்டு தமிழ் அன்னை உருவமும், அரசியல் கட்சி தலைவர்களையும் காய்கறிகளை கொண்டு தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அரசு துறைகள் சார்பில் கண்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. பிரையண்ட் பூங்காவில் அலங்கார வளைவு, மலர் அலங்கார மேடை, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கம் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் இன்று முதல் தொடர்ந்து 10 நாட்கள் வரை கோடை விழா நடைபெற இருப்பதும் குறிப்பிடதக்கது.

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

சுற்றுலா பயணிகள் உற்சாகம்

இந்த நிகழ்வில் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி, உணவு துறை அமைச்சர் சக்கரபாணி, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய நான்கு அமைச்சர்கள் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று தொடங்கிய மலர்கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

தமிழன்னை சர்ச்சை

தமிழன்னை சர்ச்சை

முன்னதாக தமிழன்னை சிலைக்கு பதிலாக அம்மன் சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும், காலடியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உருவத்தினை பழங்களில் வடிவமைத்து அம்மனின் காலடியில் வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த படங்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அது அம்மன் சிலை இல்லை எனவும், தமிழன்னை சிலை என அதிகாரிகள் போர்டு வைத்தனர்.

உருவங்கள் அகற்றம்

உருவங்கள் அகற்றம்

இதனைக் கண்ட தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தமிழன்னையின் காலடியில் இருந்த கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உருவம் பொறித்த பழங்களை எடுத்து தமிழன்னையின் அருகில் மாற்றி மாற்றி வைத்தனர். அதனை செய்தியாளர்கள் படம் பிடிப்பதை பார்த்து உடனடியாக அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதி மற்றும் முதல்வர் ஸ்டாலின் உருவம் பதித்த பழங்களை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் அகற்றினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+