திண்டுக்கல்லில் உடம்பெல்லாம் மூளை.. சிலிண்டர்களுடன் வந்த கேஸ் ஊழியர்.. கனவிலும் நினைக்காத சம்பவம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மெங்கிலிஸ் சாலை பகுதியில் நேற்று கேஸ் ஏஜென்சி நிறுவனத்தின் ஊழியர் மூன்று சக்கர சைக்கிளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்தார். சாலையோரத்தில் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு கேஸ் சிலிண்டரை எடுத்து சென்றார். ஒருசில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்தபோது சைக்கிளில் இருந்த கேஸ் சிலிண்டர்களில் ஒன்றை காணவில்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலிண்டரை திருடியது தெரியவந்தது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரால் கடந்த சில நாட்களுக்கு முன்பு சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. மேலும் கேஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி, வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளி 25 நாட்களாக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த 2 நாட்களாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரை போன் செய்து முன்பதிவு செய்ய முடியவில்லை.

இதற்கிடையே வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.. இதனால் ஓட்டல், டீக்கடை, சாலையோர உணவகங்களில் சமையலுக்கு கேஸ் சிலிண்டரை பெற முடியாமல் பரிதவிக்கிறார்கள். மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள்,அம்மா உணவகம் ஆகியவற்றுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து கேஸ் சிலிண்டர்கள் தரப்படுகின்றன. வீடுகளுக்கும் புக்கிங் செய்தால் உடனே கிடைப்பது இல்லை.. இதுதான் தற்போதைய நிலையாக உள்ளது.
இந்த நிலையில் திண்டுக்கல் மெங்கிலிஸ் சாலை பகுதியில் நேற்று ஒரு கேஸ் ஏஜென்சி நிறுவனத்தின் ஊழியர் மூன்று சக்கர சைக்கிளில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்களை ஏற்றி வந்துள்ளார். சாலையோரத்தில் தனது சைக்கிளை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த ஒரு வீட்டுக்கு கேஸ் சிலிண்டரை எடுத்து சென்றார். ஒருசில நிமிடங்களில் திரும்பி வந்து பார்த்தபோது சைக்கிளில் இருந்த கேஸ் சிலிண்டர்களில் ஒன்று மாயமாகி இருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்தபோது ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் சிலிண்டரை திருடி சென்றதை அவர் கண்டு ஆடிப்போனார்.
இதேபோல் திண்டுக்கல்லை அடுத்த பிள்ளையார்நத்தம் பகுதியிலும் வீடுகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர்களில் ஒன்றை, ஆட்டோவில் வந்த கும்பல் திருடி சென்றிருக்கிறது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து அடுத்தடுத்து கைவரிசை காட்டி வருகிறார்கள். இது கேஸ் சிலிண்டர் விநியோக ஊழியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது, மேலும் தட்டுப்பாடு திருட்டுக்கு வழிவகுப்பதால், சிலிண்டர்களை கொண்டு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஏஜென்சிகள் அறிவுறுத்தி வருகின்றன.












Click it and Unblock the Notifications