Dindigul NIA raid: திண்டுக்கல்லில் திகுதிகு.. அதிகாலையில் களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்! 10 இடங்களில் அதிரடி ரெய்டு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அதிகாலையில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டில் இறங்கியுள்ளனர். எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு உட்பட 10 இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னா நகர் பகுதியில் உள்ள எஸ்டிபிஐ மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீட்டிலும், ஒட்டன்சத்திரம் யூசுப் என்பவர் வீட்டிலும், வத்தலக்குண்டு பகுதியில் உமர் என்பவர் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திண்டுக்கல்லில் கொடைக்கானல் பகுதியிலும், தென்காசி மாவட்டத்திலும் என்ஐஏ ரெய்டு மேற்கொண்டு வருகிறது.

ரெய்டு பின்னணி:
கடந்த 2019ம் ஆண்டு கும்பகோணம் திருப்புவனம் அருகே பாமக பிரமுகர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாகத்தான் தற்போது ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமக முன்னாள் நகரச் செயலாளராவார். சமையல் கான்ட்ராக்ட் மற்றும் சமையல் பொருட்களை வாடகைக்கு விடும் பணியை செய்து வந்திருந்தார். இவர் வசித்த பகுதியில் சிலர் மதமாற்றம் செய்வதாக சொல்லப்பட்டது. இது குறித்து இவர் சம்பந்தப்பட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பின்னர் அன்று இரவு கடையிலிருந்து வீடு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் வழிமறிக்கப்பட்டு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவிடைமருதூர் போலீசார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த நிஜாம் அலி, சர்புதீன், முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த அசாருதீன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். மேலும் 18 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. இதனையடுத்து வழக்கு என்ஐஏ கையில் எடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
என்ஐஏ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக தொடர் ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தற்போது திண்டுக்கல், தென்காசி என ரெய்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications