பழனி லாட்ஜில் ரூம்.. வீட்டில் பொய் சொல்லிட்டு வந்த நர்சிங் மாணவி! திண்டுக்கல் நத்தத்தில் பேரதிர்ச்சி
திண்டுக்கல்: தெலங்கானாவில் அரசு பேருந்து மீது ஜல்லி லாரி மோதி 19 பேர் உடல் நசுங்கி இன்று உயிரிழந்த சம்பவம் நாட்டையே நிலைகுலைய வைத்து வருகிறது.. ஜல்லி கற்களுக்குள்ளேயே சடலங்கள் புதைந்துவிட்டன.. மீட்கப்பட்ட 24 பேருக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது. இதுபோலவே நேற்றைய தினமும் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்த சாலை விபத்துக்கள் அதிர்ச்சியை தந்து வருகின்றன.
சாலை விபத்துக்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகமாக விபத்து நடக்கும் இடங்களை கண்டறிந்து விபத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. எனினும் சாலை விபத்துகள் அதிகரிப்பதுடன் அநியாயமாக பல உயிர்களும் பறிபோய் கொண்டிருக்கின்றன.

தேசிய குற்ற ஆவண ஆணையம் விபத்துகளை பதிவு செய்து, அதற்கான காரணிகள் மற்றும் புள்ளி விவரங்களும் கடந்த வருடம் வெளியாகியிருந்தது.
அதில் அதிகபட்சமாக மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 90,663 சாலை விபத்துக்கள் பதிவாகியிருக்கிறதாம். எனவே, இந்த நேரத்தில் வெளியே செல்பவர்கள் கவனமாக, எச்சரிக்கையுடன் செல்லுமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டிருந்தது நினைவிருக்கலாம்
ஒரே வீட்டில் 3 பெண்கள்
நம்முடைய தமிழ்நாட்டிலும் 18 வயதுக்கு குறைந்த மைனர்கள், டூ வீலர்களை ஓட்டுவதால் அதிக விபத்துகள் நடக்கின்றன.. அதிலும் பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம், ஹெல்மெட் அணியாதது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். .
நேற்றைய தினம் தெலங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில், அரசு பேருந்தில் ஒரே சீட்டில் உட்கார்ந்திருந்த ஹைதராபாத் சென்ற 3 சகோதரிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்... 3 மகள்களையும் பறிகொடுத்துவிட்டு, பெற்றோர் கதறி அழுத காட்சி பலரையும் கலங்கடித்துவிட்டது.
நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலும் சாலை விபத்து நடந்து உயிரை பறித்துவிட்டது.. கோவில்பட்டி அருகே சாத்தூர் சாலையில் அமைந்துள்ள எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளிக்கு சொந்தமான வேன், மாணவ - மாணவியரை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக நாலாட்டின்புத்துார் சென்று கொண்டிருந்தது.
தூத்துக்குடி, திண்டுக்கல்
கருப்பசாமி வேனை ஓட்டினார். உதவியாளர் அய்யம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகள் வேனில் இருந்தனர். திருநெல்வேலி --- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென பள்ளி வேன் மீது மோதியது.. இதில் காரில் இருந்த நெல்லையை சேர்ந்த ஷேக் சையது சபீன், 55, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார் டிரைவர் அகஸ்டன், பள்ளி வேன் டிரைவர் கருப்பசாமி உட்பட 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோல நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் மாணவியை காவு வாங்கிவிட்டது படுமோசமான சாலை விபத்து..
வடமதுரை சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி.. இவருக்கு 22 வயதாகிறது.. நத்தத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் BSc நர்சிங் இறுதி ஆண்டு படித்து வருபவர்.. இதற்காக அங்குள்ள ஹாஸ்டலில் தங்கிப் படித்து வந்துள்ளார்..
லாட்ஜில் ரூம் போட்ட காதல் ஜோடி
அப்போது வடமதுரையைச் சேர்ந்த 23 வயதான நந்தகுமார் என்பவருக்கும், புவனேஸ்வரிக்கும் காதல் மலர்ந்துள்ளது.. கடந்த 2 வருடமாக இருவருமே தீவிரமாக காதலித்து வந்துள்ளனர்.. நந்தகுமார் வடமதுரையில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறாராம்.
நர்சிங் படித்துவிட்டு, தற்போது மருத்துவமனையில் டிரெய்னிங்கில் உள்ளார் புவனேஸ்வரி.. விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்தவர், நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலேஜூக்கு போவதாகவும், ஸ்பெஷல் டிரெயினிங் இருப்பதாகவும் சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்.
ஆனால் காலேஜூக்கு போகாமல், காதலன் நந்தகுமாரை சந்தித்துள்ளார்.. இருவரும் காரில் பழனிக்கு சென்று அங்குள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்கள்..
நத்தம் சாலையில் பயணம்
பிறகு நேற்று காலை காலேஜூக்கு கிளம்பியிருக்கிறார்.. திங்கட்கிழமை காலை 7 மணிக்குள் மாணவி வகுப்பில் இருக்க வேண்டும் என்பதால் அவசர அவசரமாக கிளம்பியிருக்கிறார்.
அவரை காரில் ஏற்றிக் கொண்டு நத்தம் நோக்கி நந்தக்குமார் வந்துள்ளார்.. காலை சுமார் 6.30 மணிக்கு பழனியை அடுத்த ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சத்திரப்பட்டி மாட்டுப்பாதை பகுதியில் கார் வந்தபோது, சாலையின் வளைவை நந்தகுமார் கவனிக்காமல் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது.
தலை நசுங்கியது
அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், புவனேஸ்வரியின் தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். படுகாயங்களுடன் நந்தகுமார் உயிர் தப்பினார்.. .
இந்த விபத்தை பார்த்து பதறிய அந்த பகுதி மக்கள் உடனே சத்திரப்பட்டி போலீசுக்கு தகவல் தந்தனர்.. விரைந்து வந்த போலீசார் மாணவியின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.,.. இந்த விபத்து குறித்து நந்தகுமாரிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications