10 சென்ட் கிடச்சாலும் விடாதீங்க..திண்டுக்கல்லுக்கு ஜாக்பாட்..சுத்துப்பட்டு மக்களுக்கு ஹாப்பி நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே திண்டுக்கல்லில் புதிய ரிங் ரோடு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் இந்த திட்டத்தின் காரணமாக பல இடங்களில் ரியல் எஸ்டேட் தொழிலும் சூடு பிடித்திருக்கிறது. விவசாயிகளுக்கு குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்பட்டதாக ஒருபுறம் கூறப்பட்டாலும், சாலைக்கு அருகில் இருக்கும் நிலங்கள் தற்போது அதிக விலைக்கு போவதாக சொல்லப்படுகிறது.

தென் மாவட்டங்களின் நுழைவாயிலாக திண்டுக்கல் இருக்கிறது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவை தென் மாவட்டத்தையும் வட மாவட்டங்களையும் இணைக்கிறது. மேலும் திண்டுக்கல் கோவை, பழனி ஆகிய மேற்கு மாவட்டங்களுக்கும், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட கிழக்கு மாவட்டங்களையும் இணைக்கிறது.

மேலும், மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களையும், விழுப்புரம், திருச்சி, பெரம்பலூர் ஆகிய வடக்கு மாவட்டங்களையும் இணைக்கும் முக்கிய புள்ளியாக இருக்கிறது. திண்டுக்கல்லை சுற்றி ஐந்து தேசிய நெடுஞ்சாலைகளும் இருக்கிறது.

Dindigul Ring Road Real Estate

திண்டுக்கல் தேனி தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் கோவை தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் நத்தம் தேசிய நெடுஞ்சாலை ஆகியவை இருக்கின்றன. இந்த சாலைகளில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் நிலையில் ஒரு சாலையில் இருந்து மற்றொரு சாலைக்கு செல்ல நகருக்குள் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நேர விரையம் உள்ளிட்டவை ஏற்பட்டது.

குறிப்பாக மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை திண்டுக்கல்லை கடக்கும் நிலையில் பல கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மதுரையிலிருந்து திருச்சி செல்ல வேண்டிய வாகனம் பழனி கரூர் ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் வழியே பயணித்து திருச்சி சாலையை அடைய வேண்டி உள்ளது. இதை அடுத்து மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருந்தது.

இதற்காக திட்டம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டாலும் பல ஆண்டுகளாக இந்த திட்டம் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் நீண்ட இழுபறிகளுக்கு பிறகு தற்போது மதுரை - திண்டுக்கல் - திருச்சி சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளோடு பகுதியில் இருந்து பில்லமாநாயக்கன்பட்டி பெரியகோட்டை வழியாக முள்ளிப்பாடி வரை திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கும் வகையில் இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படுகிறது.

இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. நிலத்துக்கு குறிப்பிட்ட சதவீதமும், மரம், கிணறு ஆகியவற்றிற்கு தகுந்த இழப்பீடுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. சிலர் தங்களுக்கு குறைந்த அளவிலான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அவ்வப்போது போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த சாலை செல்லும் வழி முழுக்க முழுக்க விவசாய நிலங்களாக இருந்தது. இதனால் அங்கெல்லாம் நிலத்தின் மதிப்பு சரிந்து காணப்பட்டது. தற்போது இந்த சுற்றுச் சாலையின் காரணமாக குறிப்பிட்ட அளவு நிலம் அரசுக்கு வழங்கப்பட்டாலும் அதற்கு அருகில் உள்ள இடங்களின் மதிப்பு கூடியுள்ளது. தற்போதைய இணைப்பு சாலைகளில் பலர் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், உணவகங்கள், பார்க்கிங், பெட்ரோல் பங்க், ஆகியவற்றை அமைப்பதற்காக நிலத்தை தேடி வருகின்றனர். இதனால் அங்கு ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்ந்திருக்கிறது. சிலர் தங்கள் நிலங்களை பிளாட் போட்டு விற்கவும் திட்டமிட்டு வருகின்றனர். இன்னும் சில ஆண்டுகளில் அந்த பணிகள் நிறைவடையும் நிலையில் அப்பகுதியை சுற்றிலும் நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும் என்பதால் பலரும் முதலீடாக அங்கு நிலம் வாங்கி போட முன்வந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+