மனைவி பிளானில் வீழ்ந்த கணவர்! உனக்கு 25, எனக்கு ஜஸ்ட் 45தான்.. திண்டுக்கல் டூ திருச்சி சாலை கொடுமை

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் – திருச்சி சாலையில் நடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது தொடர்பாக 2 பேர் கைதாகி, அவர்களிடமும் விசாரணை தீவிரமாகி வருகிறது. என்னதான் நடந்தது திண்டுக்கல்லில்?

திண்டுக்கல் – திருச்சி சாலையில் மா.மு.கோவிலூர் பிரிவில் உள்ளது குருவிகுளம் என்ற காட்டுப்பகுதி.. இங்கு 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 27ஆம் தேதி இறந்துகிடந்தார்.. அவரது தலையில் 2 வெட்டு காயங்கள் கிடந்தன. இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் தந்தனர்..

trichy

என்ன காரணம்: போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், சடலம் கிடந்த இடத்தில் 2 மது பாட்டில்கள் விழுந்து கிடப்பதை கண்டனர்.


ஒருவேளை அந்த நபரை யாராவது அடித்து கொன்றார்களா? அல்லது அளவுக்கு அதிகமாக மது குடித்து கீழே விழுந்து, மண்டை உடைந்து இறந்து போனாரா? என்கின்ற கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

போஸ்ட் மார்ட்டம்: அப்போதுதான் அவரது தலையை யாரோ கொடூரமாக தாக்கி கொன்றதால் உயிரிழந்ததாக, போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளியானது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, உயிரிழந்தவர் யார்? கொலைக்குற்றவாளிகள் யார்? எதற்காக கொலை நடந்தது? என்ற விசாரணைகள் துரிதமாயின. இறுதியில், கொலை செய்யப்பட்டவரின் அடையாளம் தெரிந்தது.

கொலை செய்யப்பட்டவர் காளனம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து (54) என்பதும், கூலி வேலை செய்யும் நாச்சிமுத்துவுக்கு காளியம்மாள் (வயது 45) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் இருப்பது உறுதியானது.

நாச்சிமுத்து: இதையடுத்து நாச்சிமுத்துவின் மரணம் குறித்து காளியம்மாளிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் காளியம்மாள் முன்னுக்கு பின் முரணாக பேசி போலீசாரிடம் வசமாக சிக்கி கொண்டார். பிறகு அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டபோது, காளியம்மாள் சொன்னதை கேட்டு போலீசார் அதிர்ந்துவிட்டார்கள்.

trichy

அதாவது மாங்கரை நடுப்பட்டியை சேர்ந்த கிருபாகரன் என்ற 25 வயது இளைஞருடன் காளியம்மாளுக்கு கள்ள உறவு இருந்துள்ளது.. இவர்களது கள்ளக்காதல் நாச்சிமுத்துக்கு தெரியவந்து, மனைவியை பலமுறை கண்டித்துள்ளார்.. ஆனால், காளியம்மாள் தொடர்ந்து தவறான உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. ஒருகட்டத்தில் நாச்சிமுத்துவின் அறிவுரைகள் எல்லைமீறவும், கணவனை கொலை செய்ய வேண்டும் என கிருபாகரனிடம் சொல்லி உள்ளார் காளியம்மாள்.

பிளான்: இதனிடையே, கடந்த 26ம் தேதி நாச்சிமுத்துவும் காளியம்மாளும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக வந்துள்ளனர்.. அப்போது, மருத்துவமனைக்கு வந்துள்ள தகவலை கிருபாகரனுக்கு போன் செய்து சொன்னார் காளியம்மாள்.

உடனே கிருபாகரன், திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்து நாச்சிமுத்துவை சந்தித்து நட்பாக பேசியிருக்கிறார்.. மதுகுடிக்கலாம் என்றும் நாச்சிமுத்துவுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து, 2 பேரும் மதுஅருந்துவதற்காக குருவிகுளம் காட்டுப்பகுதிக்கு வந்திருக்கிறார்கள்.. இருவரும் மது அருந்திகொண்டிருந்தபோது, கிருபாகரன் திடீரென கட்டையை எடுத்து நாச்சிமுத்துவின் தலையில் அடித்து படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

வாக்குமூலம்: இவ்வளவும் நாச்சிமுத்து, போலீசில் வாக்குமூலமாக கூறியிருக்கிறார். தன்னுடைய கள்ளக்காதலனும் சேர்ந்து நாச்சிமுத்துவை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார்.. இதனையடுத்து கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைதுசெய்து, மீண்டும் விசாரணையை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+