"பச்சை பொய்".. பெரியாரை பார்த்து நடுங்குறாங்க.. ஆமா, ராமர் பாலமே இல்லையாமே.. எகிறியடிக்கும் கி.வீரமணி

சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என கி.வீரமணி கேட்டுக்கொண்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என்று மத்திய அமைச்சர் சொல்லியிருக்கிறார்.. எனவே, சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு முன்வரவேண்டும்... இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மூத்த தலைவர் வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.. அத்துடன் பாஜகவையும் கடுமையாக சாடியுள்ளார்.

ராமர் பாலம் குறித்து மாநிலங்களவையில் எம்பி கார்த்திகேய சர்மா ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார்.. அந்த கேள்விக்கு மத்திய அரசின் விண்வெளி மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளித்திருந்தார்.
அவர் தன்னுடைய பதிலில், "இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்ததில் பாலம் இருந்தது எனத் துல்லியமாக சொல்ல முடியவில்லை. செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் ஆய்வு செய்ததில் ராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே சுண்ணாம்புக்கல் திட்டுக்கள் இருக்கிறது.

சுண்ணாம்புக்கல்

சுண்ணாம்புக்கல்

சுண்ணாம்புக்கல் திட்டுக்களை சிதைந்த பாலத்தின் பகுதி என்றோ, மிச்சசொச்சம் என்றோ சொல்ல முடியாது.. பண்டைய காலங்களை பற்றி கண்டறிய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்படுகிறது.. அதன் மூலம் ஹரப்பா நாகரீகம் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளோம். 18,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்பதால், ராமர் பாலம் பற்றிய தகவல்களைக் கண்டறிவதில் சிக்கல்கள் உள்ளன.. 56 கி.மீ. நீளத்துக்கு பாலம் இருந்ததாக நாம் கருதுகிறோம். உண்மையில், அங்கு இருந்த சரியான கட்டமைப்பைக் குறிப்பிடுவது கடினம். அந்தக் கட்டமைப்புகள் இருந்ததற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏதோ ஒரு அறிகுறி இருக்கிறது" என்று கூறியிருந்தார்.

 வீரமணி காட்டம்

வீரமணி காட்டம்

இந்நிலையில், இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் பாஜகவை கடுமையாக சாடியும் உள்ளார்.. தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திராவிடர் கி.வீரமணி திண்டுக்கல் வந்திருந்தார்.. அப்போது, திண்டுக்கல் மெயின்ரோட்டில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாவட்ட தலைவர் வீரபாண்டி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார். அப்போது கி.வீரமணி சொன்னதாவது:

 பேராயுதம் பெரியார்

பேராயுதம் பெரியார்

தந்தை பெரியார் ஒரு பேராயுதம்.. மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றையெல்லாம் தீர்க்கக்கூடிய பேராயுதமாக இளைஞர்களின் கையில் இருந்து வருகிறார்... அதன் விளைவாக உடலால் வாழ்ந்த காலத்தைவிட உணர்வால் நிறைந்த காலமாக இந்த காலம் உள்ளது... எதிரிகள் கூட பெரியாரை கண்டு இன்னும் பயப்படுகிறார்கள்... பெரியாரின் சிலையை கண்டு அஞ்சக்கூடிய நிலையில் உள்ளனர்... தென்மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய மாபெரும் திட்டம் சேதுசமுத்திர கால்வாய்திட்டம்.

 ராமர் பாலம்

ராமர் பாலம்

இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருந்தால் தென்மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திருக்கும்... அதேபோல தென்தமிழகமும், மிகப்பெரிய அளவிற்கு பயன்பெற்றிருக்கும். மதுரையில் இந்த திட்டத்திற்கான தொடக்க விழா பிம்ரமாண்டமாக நடைபெற்றது... ரூ.2000 கோடிக்கு மேல் செலவு இதற்காகவே செய்யப்பட்டது... வேண்டுமென்றே ஒருசிலர் ராமர்பாலம் இருப்பதாக சொல்லி இந்த திட்டத்தை நிறுத்தினர்.. இதனால் வேறுவழியில் சேதுசமுத்திர திட்டம் செயல்படுத்தப்படும் என்று பாஜக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் உறுதி கூறியிருந்தார். ஆனால் இதுவரை இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

 பச்சை பொய்

பச்சை பொய்

இப்போது, நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த துறைக்கான அமைச்சர் பேசும்போது, ராமர்பாலம் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் கிடையாது என்று சொல்லியிருக்கிறார்.. இதன் மூலம் பொய்யான காரணத்தை கூறி, இந்த திட்டத்தை பாஜக அரசு முடக்கியுள்ளது... தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துவிடக்கூடாது என்பதற்காகவே செய்யப்பட்ட சூழ்ச்சி இது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது... எனவே இதற்கு பிறகாவது, சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்தியஅரசு முன்வரவேண்டும்... இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்" என்று மூத்த தலைவர் வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+