வடமதுரையில் நெடுஞ்சாலை மைல் கல்லில் இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்து திமுகவினர் போராட்டம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நெடுஞ்சாலை மைல் கல்லில் ஊர் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி எழுத்துகளை திமுகவினர் தார்பூசி அழித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் வடமதுரை பகுதியில் மைல் கற்கள் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டு எழுதப்பட்டிருந்தன. இந்த புதிய மைல் கற்களில் வடமதுரை, திருச்சி உள்ளிட்ட ஊர் பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன.

இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டன. இதனையடுத்து வடமதுரை திமுகவினர் திருச்சி நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துகள் எழுதப்பட்ட மைல் கற்களை சூழ்ந்தனர். பின்னர் இந்தி திணிப்பு எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பியபடி, இந்தி எழுத்துகளை தார்பூசி அழித்தனர். வடமதுரை பேரூர் திமுக செயலாளரும் கவுன்சிலருமான மெடிக்கல் கணேசன் சவடமுத்து தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தி எழுத்துகளை திமுகவினர் தார்பூசி அழித்ததால் வடமதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.
வடமதுரையில் இந்தி எழுத்துகள் தார்பூசி அழிக்கப்பட்ட படங்கள், வீடியோக்களும் சமூக வலைதலங்களில் பகிரப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்தி எழுத்துகள் மைல் கற்களில் இடம்பெறலாமா? கூடாதா? என்பது தொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் நிகழ்ந்து வருகின்றன.


-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications