டாக்டர் பாக்குற வேலையா இது? ட்யூட்டி நேரத்தில் ‘அந்த’ டார்ச்சர்.. செவிலியர் எடுத்த விபரீத முடிவு!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பணி நேரத்தில் செவிலியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததோடு, பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டிய அரசு மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பணியிடங்கள் ஆனாலும் பள்ளிக்கூடங்கள் ஆனாலும் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்கள் சிக்காமல் இருக்க எத்தனை நடவடிக்கை எடுத்தாலும் அது வீணாக போய்விடுகிறது.

ஆசை காட்டியோ மிரட்டியோ பெண்களை போகப் பொருளாக நினைக்கும் ஒரு சில கயவர்கள் அவர்களுக்கு பாலில் தொந்தரவு அளிப்பது இல்லையேல் மிரட்டுவது என அத்துமீறலை தொடர்ந்து வருகின்றனர். இதனால் பல பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதும் தொடர்கிறது.
தமிழகத்தில் இது போன்ற பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கிறது. குற்றவாளிகள் கைது செய்யப்படுவதும் மீண்டும் அவர்கள் அதே வேலையை காட்டுவதும் தொடர்ந்து வருகிறது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் பாலியல் தொல்லைகளில் சிக்கும் பெண்கள் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். தாங்கள் பணியாற்றும் நிறுவன தலைமைக்கு அல்லது காவல்துறையில் நேரடியாக புகார் அளித்தால் இதுபோன்ற பிரச்சனைகளிலிருந்து இருந்து மீளலாம்.
ஆனால் பாலியல் தொல்லையை தாங்கிக் கொண்டு இஷ்டம் இல்லை என்றால் தற்கொலை முடிவு எடுக்கும் விபரீதமும் நடைபெற்று வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல்லில் நடைபெற்று இருக்கிறது. பணி நேரத்தில் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என அரசு மருத்துவரே தொல்லை கொடுக்க, தொல்லை தாங்காமல் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார் செவிலியர் ஒருவர். இதை அடுத்து அந்த மருத்துவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டி அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் சீனிவாசன் இவர் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சியில் இல்லம் தேடி மருத்துவம் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றும் ஒரு பெண் செவிலியருக்கு பணியின் போது பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும் தனது விருப்பத்துக்கு இணங்காவிட்டால் பணியில் இருந்து விலக்கி விடுவதாகவும் சீனிவாசன் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த அந்த செவிலியர் தற்கொலைக்கு முயன்று உள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவர் சீனிவாசனிடம் விசாரணை மேற்கொண்ட வத்தலக்குண்டு போலீசார் அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மருத்துவர் சீனிவாசனை கைது செய்தனர். செவிலியர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அரசு மருத்துவர் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications