Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? உள்ளே விட மாட்டாங்க! இ-பாஸை அப்ளை செய்வது எப்படி? ஈசியான வழி இதோ!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: தமிழகத்தில் புகழ்பெற்ற ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா செல்ல இ-பாஸ் கட்டாயம் என நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ள நிலையில் தற்போது கொடைக்கானல் மற்றும் ஊட்டிக்கு செல்லும் வழிகளில் தீவிர வாகன சோதனைக்கு பிறகு வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் எளிதாக மொபைலில் அல்லது ஆன்லைன் மூலம் இ-பாஸ் எப்படி அப்ளை செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு, இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக நகர் பகுதி மற்றும் மலைச்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து காணப்பட்டது.

E-Pass Ooty Kodaikanal

இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் நீதிமன்றம் கடந்த வருடம் இ-பாஸ் முறையை கட்டாயப்படுத்தியது. அதை தொடர்ந்து தற்பொழுது கொடைக்கானல், ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் அதிகப்படியான வாகனங்கள் இங்கு வரக்கூடும் என்பதனால் தற்போது இ பாஸ் குறித்து மேலும் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொடைக்கானலுக்கு வரக்கூடிய வாகங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய அறிவிப்பை அறிவித்தது. இதில் வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் அனுமதிக்க வேண்டும் என ஒரு ஆணை பிறப்பித்துள்ளது, அதனை தொடர்ந்து இன்று முதல் இ பாஸ் சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டி மற்றும், கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் நேற்று முதல் இ-பாஸ் சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

E-Pass Ooty Kodaikanal

குறிப்பாக வார நாட்களில் 4000 வெளியூர் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் இ-பாஸ் பதிவு செய்வதில் 4,000 மற்றும் 6,000 இ-பாஸ் பதிவு செய்தவுடன், இணையதளத்தில் மீண்டும் பதிவு செய்யாத வகையில் அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் பதிவு செய்த நாளில் சுற்றுலா வாகனங்கள் வராமல் உள்ள சூழ்நிலையில் மற்ற சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் கொடைக்கானல் நகர்ப்பகுதிக்குள் வருவதற்கு வழி வகை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

E-Pass Ooty Kodaikanal

மேலும் பேருந்துகள் மற்றும் ரயில்களில் வருவோருக்கும் விவசாய பணிகளுக்கு செல்வோருக்கும் எந்த வித கட்டுப்பாடும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு வரக்கூடிய சுற்றுலா வாகனங்களுக்கு சோதனை சாவடி அருகிலேயே பணியாளர்கள் அமைத்து இ பாஸ் பெறுவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்த நடைமுறையானது இரண்டு மாதங்கள் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

E-Pass Ooty Kodaikanal

இந்த நிலையில் எளிதாக மொபைலில் அல்லது ஆன்லைன் மூலம் இ-பாஸ் எப்படி அப்ளை செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். https://epass.tnega.org/ என்ற தமிழக அரசின் இணையதள பக்கத்திற்கு சென்றால், நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் என கேட்கும். அதில் இந்தியாவுக்கு வெளியில் இருந்து இந்தியாவுக்கு உள்ளே என்பதில், நீங்கள் இந்தியாவில் வசிப்பவர் என்றால் இந்தியாவுக்கு உள்ளே என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது லாகின் விவரங்களை கேட்கும்.

E-Pass Ooty Kodaikanal

அப்போது உங்களது மொபைல் எண்ணை கொடுத்து கேப்சாவை என்டர் செய்து கெட் ஓடிபி என கொடுத்தால் உங்களுக்கு தமிழ்நாடு அரசிடம் இருந்து நான்கு இலக்க ஓடிபி கிடைக்கும். அதை என்டர் செய்து லாகின் செய்தால். நீலகிரி, கொடைக்கானல், உள்ளூர் பாஸ், முந்தைய பாஸ்கள் என கிடைக்கும் உதாரணத்திற்கு நீங்கள் கொடைக்கானல் செல்கிறீர்கள் என்றால் கொடைக்கானல் என்பதனை தேர்ந்தெடுக்க வேண்டும். ஊட்டிக்கு செல்கிறீர்கள் என்றால் ஊட்டி என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

தொடர்ந்து விண்ணப்பதாரர் பெயர், வருகையின் காரணம், வாகன பதிவு எண், மொத்த பயணிகளின் எண்ணிக்கை, வாகன உற்பத்தி வருடம், வாகன வகை, எரிபொருள் வகை, உள் நுழையும் நாள், வெளியேறும் நாள், நாடு, மாநிலம், மாவட்டம், முகவரி, அஞ்சல் குறியீடு, தங்கும் இடம் ஆகியவற்றை கொடுத்து சப்மிட் செய்ய வேண்டும்

இந்த அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது, குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்களை பயன்படுத்தக் கூடாது. சாலையோரங்களில் சமைக்கக் கூடாது, வேகமாக வாகனம் ஓட்டக்கூடாது, வனவிலங்குகளுக்கு உணவளிக்கக்கூடாது உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும். அதற்குப் பிறகு நீங்கள் சப்மிட் செய்தால் உங்களுக்கான இபாஸ் கிடைக்கும். இதை வைத்து நீங்கள் குறிப்பிட்ட நாளில் கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ செல்லலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+