பாஜக 'சைத்தான்' கூட்டணி.. வெளியேறியதில் எடப்பாடிக்கு 1000 மடங்கு மகிழ்ச்சி: திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல்: பாஜக என்ற சைத்தான் கூட்டணியிலிருந்து வெளியேறியதில் நாங்கள் 100 மடங்கு மகிழ்ச்சி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்ததில் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு சந்தோஷத்தில் இருக்கிறார்.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து திண்டுக்கல்லில் நடந்த கூட்டம் ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "நம்முடைய சைத்தான் மற்ற விஷயங்களை எல்லாம் சொல்லி" என்று உங்களால் சொல்லப்படுகின்ற அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதால் உயர்ந்த மகிழ்ச்சி அடைகிறோம்.. எப்ப அந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.. இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். இனிமேல் பள்ளிவாசல் தெருவாக இருந்தாலும் சரி, அரசமரத்து தெருவாக இருந்தாலும் சரி, சமாஜ் தெருவாக இருந்தாலும் சரி, இனி பாஜக உடன் கூட்டணி வைத்ததால் ஒட்டுகேட்டு வராதே என்று சொல்ல மாட்டார்கள்.
உங்களில் ஒருவராக உங்களின் அன்பு தம்பியாக இருக்கக்கூடிய எங்களை போன்றவர்கள் மிக மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கிறோம்.. பாஜக கூட்டணியில்இருந்து வெளியேறிதால் 100 மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றால்.இந்த கூட்டணியில் இருந்து விலகியதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்.
முன்பு உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சனை என்றால் மன வருத்தங்கள் தான். நீங்கள் எங்களுக்கு பிடிக்காத முஸ்லிம்களை வெறுக்கின்ற பாஜக உடன் கூட்டணியில் இருப்பது எங்களுக்கு பிடிக்கவில்லை என்று சொன்னீர்கள்.. தயவு செய்து எடப்பாடியாரிடம் சொல்லுங்கள் என்றீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலை மாறி மாறி வந்தது. வாஜ்பாய் இருந்த போது திமுக அமைச்சரவையில் இருந்தாங்க.. மறுபடியும் சோனியா வந்த போது, அவங்களோடு திமுக அமைச்சரவையில் இருந்தாங்க.. திமுகவை ஏற்றுக்கொண்டீங்க.. எங்களை வெறுத்துட்டீங்க.. ஆனாலும் பரவாயில்லை.. இறைவனுடைய நாட்டம் நாடி, இன்றைக்கு பாஜகவில் இருந்து விலகி, இனிமேல் அதில் நாங்கள் இணைய மாட்டோம்..

ஆனால் பாஜகவும் எடப்பாடியாரும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள், தேர்தலுக்கு பிறகு சேர்ந்து கொள்வார் என்று பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டிருக்கிறது.. ஆனால் நீங்கள் ஒன்றை நன்றாக பிரிந்து கொள்ளவேண்டும்.. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் எடப்பாடியார் என்பதை நாங்கள் ஊர் முழுவதும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்..ஆனால் பாஜகவில் இருப்பவர்கள் அடுத்த பிரதமர் நரேந்திர மோடி என்று சொல்கிறார்கள்.
அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியா என்று கேட்கிறார்கள் செய்தியாளர்கள். அதற்கு பாஜகவில் உள்ளவர்கள், எங்கள் இலக்கு பாரத பிரதமராக நரேந்திர மோடி வருவது தான் என்றார்கள். ஆனால் அடுத்த முதல்வர் அண்ணாமலை என்று போகும் இடமெல்லாம் சொல்கிறார்கள்.அவர்கள் சொல்லிவிட்டு போகட்டும்.. நாங்கள் டெல்லி சென்று நிலைமையை சொல்லிவிட்டு விலகிவிட்டோம்.. சட்டசபை தேர்தலே முக்கியம்.. அதில் வென்று ஆட்சி அமைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்தோம்" இவ்வாறு கூறினார்.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications