திண்டுக்கல் துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் சுட்டுக் கொலை- பதுங்கிய 4 பேர் அதிரடி கைது!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் துப்பாக்கிச் சூடு நடத்தி இளைஞர் ஒருவரை படுகொலை செய்த சம்பவத்தில் திண்டுக்கல்லிலேயே பதுங்கி இருந்த 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
Recommended Video
திண்டுக்கல் மேற்கு மரியநாத புரத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் ராகேஷ் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள செட்டிகுளத்தில் மீன்பிடி குத்தகை எடுத்துள்ளார்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவில் குளக்கரையில் தனது நண்பர்களுடன் ராகேஷ் பேசிக் கொண்டிருந்தார். அதாவது மீன்பிடி குத்தகைக்கு எடுத்த குளத்தை காவல் காத்து கொண்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

சரமாரி துப்பாக்கி சூடு
அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ராகேஷ் உடன் தகராறு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கும்பலில் இருந்த 2 பேர் திடீரென தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கிகளால் ராகேஷை சரமாரியாக சுட்டனர். துப்பாக்கி குண்டுகள் அடுத்தடுத்து பாய்ந்த நிலையில் ராகேஷ் மயங்கி சரிந்து விழுந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் மரணம்
இதில் படுகாயமடைந்த ராகேஷை அவரது நண்பர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில் ராகேஷின் வலது விலா எலும்பு, வயிற்றுப்பகுதி என ஆறு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் துளைத்த காரணத்தினால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மீன்பிடி குத்தகை முன்விரோதம்
இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி விஜயகுமாரி மற்றும் மாவட்ட எஸ்பி ஸ்ரீனிவாசன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் ரூபி மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். முதற்கட்ட விசாரணையில் செட்டிகுளத்தில் மீன்பிடி குத்தகை எடுப்பதில் முன்விரோதம் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

5 தனிப்படை போலீசார் தேடுதல்
இதனிடையே துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்களை முதலில் 3 தனிப்படை போலீசார் தேடி வந்தனர். பின்னர் 5 தனிப்படை போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை தீவிரமாக தேடினர். இந்த தேடுதல் நடவடிக்கையில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications