Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு குஷி.. விரைவில் அரிசிக்கு பதில் இந்த பொருள்? குட்நியூஸ் திண்டுக்கல்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான உணவுத் திருவிழா நடைபெற்றது.. இந்த திருவிழாவில் தமிழக அமைச்சர்கள் 3 பேர் பங்கேற்றிருந்தனர்.. அப்போது சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமைச்சர்கள், ரேஷனில் வழங்கப்படும் அரிசிக்கு பதிலாக, சிறுதானியம் ஒன்றை வழங்குவது குறித்த யோசனையையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவசமாகவும், மலிவு விலையிலும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.. இந்த பொருட்களுடன் சேர்த்து, கூடுதலாக கேழ்வரகு வழங்க முடிவு செய்யப்பட்டது. எனவே, முதல்கட்டமாக நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது.

ration ration shops dindigul

தமிழக விவசாயிகள்: இதற்காக தமிழக விவசாயிகளிடமிருந்து கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை, 17,000 டன் கேழ்வரகு கொள்முதல் செய்து தர, வாணிப கழகத்திற்கு மத்திய உணவு துறை அனுமதி அளித்துள்ளதாகவும், கேழ்வரகு அதிகம் விளையும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில், அடுத்த மாதம் முதல் நேரடி கொள்முதல் நிலையங்களை துவக்கி, கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் 4 மாதங்களுக்கு முன்பே செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான உணவுத் திருவிழாவில், தமிழக அமைச்சர்கள் சக்கரபாணி, அமைச்சர் பெரியசாமி, பெரியகருப்பன் பங்கேற்றிருந்தனர்..

சக்கரபாணி: இந்த திருவிழாவில் அப்போது உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, சிறுதானிய உணவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். "பொது விநியோக திட்டத்தின் கீழ் தற்போது நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக கேழ்வரகு வழங்கப்பட்டு வருகிறது.

பரிசோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, மக்களின் ஆரோக்கியத்தையும் உணவுப் பொருளையும் கருத்தில் கொண்டு விரைவில் தமிழ்நாடு முழுவதும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. சிறுதானிய உணவுகளை ஊக்குவிக்கும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் சிறுதானியங்களை விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது..

பயன்பாடுகள்: முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு தமிழகத்தில் சிறுதானியங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக தருமபுரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக 2 கிலோ கேழ்வரகு வழங்க வேண்டும் என்று முடிவு செய்து தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக எதிர்வரும் காலங்களில் அரிசிக்கு பதிலாக சிறுதானியங்களை அதிகமாக உட்கொண்டால் உடல் ஆரோக்கியமாக வாழலாம். சிறுதானியங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

ரேஷன் அட்டைதாரர்கள்: முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றபிறகு, தமிழகத்தில், 2 கோடியே 21 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொது விநியோக திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து ராகி நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் இம்மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றார்.

தொடர்ந்து அமைச்சர் பெரியசாமி பேசும்போது, "சிறுதானிய உணவு வகைகள் பயன்பாட்டை தூண்டுவதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 2 வருடங்களாகவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரசு திட்டங்கள்: பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம், உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே தலைசிறந்த முதலமைச்சராக திகழ்கிறார். தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக திகழ்கிறது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்கிட வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் ஆர்வத்துடன் முன்வருகின்றன. அனைத்து மாவட்டங்களிலும் சிப்காட் கொண்டுவர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிறுதானிய உணவு வகைகள் மற்றும் அதன் பயன்களை அறிந்து தொடர்ந்து பயன்படுத்துவதுடன், உறவினர்கள், நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

பெரியகருப்பன்: உணவுத்திருவிழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசும்போது, "தமிழகம் முழுவதும் 37,000 ரேஷன் கடைகள் மூலம் உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. நியாயவிலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

பொதுவிநியோகத் திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறப்பான சேவை செய்து வருகிறது. தமிழ்நாட்டை போல் மற்ற மாநிலங்களிலும் பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்திட மாண்பமை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+