திண்டுக்கல்லில் உனக்கு 16 எனக்கும் 16.. 15 பவுன் தங்கம்.. இந்த வயதில் பார்த்த பெரிய வேலை
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், பட்டிவீரன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், அதே பள்ளியில் படித்த மாணவியுடன் நட்பாக பேசினார். பின்னர் காதலிப்பதாக அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். அந்த மாணவன் தங்க நகைகளை கேட்டுள்ளான். அவனை நம்பி 15 பவுன் நகைகளை கொண்டு வந்துள்ளார் மாணவி. இப்படி வாங்கிய நகையை 'அபேஸ்' செய்த 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பள்ளியில் படிக்கும் வயதிலேயே காதலில் விழுகும் அளவிற்கு நிலைமை கைமீறி போய்விட்டது. காதலில் விழுந்த சிறுமியை ஏமாற்றி சக வகுப்பு மாணவன் தங்க நகையை பறித்துள்ளான். அவனுக்கு இன்னொரு மாணவனும் துணையாக இருந்துள்ளான். பருவ வயதில் வருவது காதல் அல்ல..இனக்கவர்ச்சி என்பதை புரிய வைக்க வேண்டியது பள்ளியில் தான். அந்தவயதில் வாழ்க்கையைதுணையை மாணவ மாணவிகள் தேடுவது ஆபத்தானது. அவர்களின் எதிர்காலத்தையே அழித்துவிடும். பலர் சரியான எதிர்காலத்தை வடிவமைக்காமல் போக பள்ளியில் வந்த காதலே காரணமாக இருக்கிறது.திண்டுக்கல் சம்பவம் பற்றி பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவன், பட்டிவீரன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன், அதே பள்ளியில் படித்த மாணவியுடன் நட்பாக பேசினார். பின்னர் காதலிப்பதாக அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். அப்போது மாணவியிடம், அந்த மாணவன் தங்க நகைகளை கேட்டுள்ளான். மாணவியும் தான் அணிந்திருந்த கம்மல், மோதிரம், செயின் என சிறுக, சிறுக தங்க நகைகளை கொடுத்திருக்கிறார்.
இதற்கிடையே மாணவி திண்டுக்கல்லில் உள்ள ஒரு பள்ளியில் சேர்ந்துள்ளார். ஆனாலும் மாணவனும், மாணவியும் தொடர்ந்து பேசி வந்துள்ளார்கள். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பள்ளி மாணவன், அந்த மாணவியிடம் மேலும் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துவரச் சொல்லி வற்புறுத்தி உள்ளார்கள். ஆனால் மாணவி, வீட்டில் உள்ள நகைகளை எடுத்து கொடுக்க மறுத்துவிட்டார்.
அப்போது அந்த மாணவன், தன்னை காதலிப்பதாக மாணவியின் பெற்றோரிடம் கூறி விடுவதாக மிரட்டி உள்ளான், இதனால் பயந்து போன அந்த மாணவி, வீட்டில் இருந்து நகைகளை எடுத்து கொடுத்திருக்கிறார். இந்தநிலையில் வீட்டில் நகைகள் மாயமானதை பார்த்து மாணவியின் பெற்றோர் ஆடிப்போனார். இதுகுறித்து தங்களது மகளிடம் விசாரித்தனர். அப்போது அந்த மாணவி, தனது நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 15 பவுன் நகைகளை மாணவனிடம் கொடுத்ததாக தெரிவித்தாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை மிரட்டி நகைகளை 'அபேஸ்' செய்த மாணவன் மற்றும் அவனுக்கு உடந்தையாக இருந்த மற்றொரு மாணவனையும் கைது செய்தனர். இதுதொடர்பாக 2 பேரிடமும் விசாரணை நடந்து வருகிறது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications