இன்னும் சில வாரம்தானாம்.. தமிழ்நாடு அரசு கவிழ்ந்து போய்விடுமாம்.. சொல்வது எச்.ராஜா
திண்டுக்கல்: தமிழக அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம் என எச். ராஜா பகீர் தகவலை அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோயில் பாதுகாப்பு பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில் பழனி மலைக் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம். தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை என்பது மதம் சார்புடையது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

பழனி அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான கோ சாலையில் உள்ள பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களில் பலவற்றை கேரளாவில் அடிமாட்டு விலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். அங்கு அவை இறைச்சிக்காக வெட்டப்படுகிறது.
பசுக்களை எல்லாம் இப்படி அனுப்பிவிட்டால் 288 ஏக்கர் நிலத்தில் சிப்காட் நிறுவனம் அமைக்க அமைச்சர் முயற்சிக்கிறார். இந்து சமய அறநிலையத் துறை அரசுக்கு சொந்தமானது தவிர இந்து கோயில் அரசுக்கு சொந்தமானது இல்லை. அது இந்து மக்களுக்கானது. பழனி கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த சம்பவம் வரும் காலங்களில் நடக்காது என உத்தரவாதம் கொடுப்பார்களா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக இல்லை என தமிழக முதல்வர் கூறுவது கேலிக்கூத்து. பாமக தொண்டர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 50 விசாரணைக் கைதிகள் மரணம் உள்ளிட்டவை நடந்துள்ள நிலையில் முதல்வர் எப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை என சொல்லலாம்.
முதல்வர் ஸ்டாலின் வீட்டில் எப்போது சிபிஐ நுழையுமோ, அவரது குடும்பத்தில் துர்கா ஸ்டாலினை தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால் சிபிஐ தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என தெரிவித்திருக்கிறார். இவையெல்லாமே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை தெளிவாக விளக்குகிறது.
இன்னும் ஓரிரு வாரத்தில் திமுக ஆட்சி கலைக்கப்படலாம். மிகப் பெரிய ஊழல் குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயற்சிப்பதும் 38 நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையிலேயே வைத்திருப்பதும் ஏன். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து கூட இதுவரை யாருக்கும் தெரியாத அளவுக்கு மறைத்து வைத்திருந்தது ஏன் என எச்.ராஜா கடுமையாக விமர்சித்திருந்தார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications