1 ஆடு.. திண்டுக்கல்லே ஹேப்பி.. அய்யலூர் விவசாயிகள் குஷி.. பறக்கும் படை கெடுபிடியை மீறி பாய்ந்த சேவல்
திண்டுக்கல்: ஒரே நாளில் திண்டுக்கல்லையே திணறடித்துவிட்டது அய்யலூர்.. என்ன நடந்தது அய்யலூர் சந்தையில்?
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ளது அய்யலூர்.. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறுவது வழக்கம்.. வியாழக்கிழமைகளில் அதிகாலை 2 மணிக்கு ஆரம்பித்து 9 மணி வரை இந்த சந்தை நடைபெறும்..
ஆடுகள்: ஆடு, கோழி தவிர, சேவல்கள், வீட்டுக்கு தேவையான பொருட்களையும் இங்கு கொண்டு வரப்படும்.திண்டுக்கல் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சந்தை இந்த அய்யலூர் ஆட்டுச்சந்தை.

அதனால்தான், அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.. திண்டுக்கல் மாவட்டத்திலேயே அய்யலூர் சந்தையில்தான் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை: இந்த சந்தையிலிருந்துதான், மதுரை, திருச்சி, கரூர், ஈரோடு, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், ஆடுகள், கோழிகளை மொத்தமாக விலைக்கு வாங்க அதிகமாக வருவார்கள்.. பண்டிகை காலங்களில் மட்டுமல்லாமல், ஆடி மாதம் போன்ற விசேஷ நாட்களிலும் இந்த சந்தை படுபிஸியாக இருக்கும்.
அசைவ விருந்து: காரணம், கிராம பகுதிகளில் கோவில் திருவிழாக்கள் அதிகமாக நடைபெறுவதால், அசைவ விருந்து பரிமாறுவார்கள்.. அதுவும் இல்லாமல், வாகன ஓட்டிகள் ஆடி மாதத்தில் வாகனங்களுக்கு பூஜை செய்து, காவல் தெய்வங்களுக்கு ஆடுகளை பலி கொடுத்து உறவினர்களுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம். அதனால்தான், அய்யலூர் ஆட்டு சந்தையில் எப்போதுமே ஆடு, கோழிகள் விற்பனை அமோகமாக நடக்கும்.
இப்போது, ரம்ஜான் பண்டிகை நோன்பு நடந்து வருகிறது.. மற்றொருபக்கம் தேர்தல் விழாக்காலம் துவங்கி உள்ளது..
ரம்ஜான் பண்டிகைக்காகவும், தேர்தலுக்காக தொண்டர்களுக்கு கிடா விருந்து வைக்கவும், ஆடுகள் அதிக அளவு விற்பனையாக துவங்கி உள்ளன.. இதை கருத்தில் கொண்டு, நிறைய செம்மறி, வெள்ளாடுகள் சந்தைக்கு நேற்றுகூட கொண்டு வரப்பட்டன..
நடத்தை விதிகள்: ஆனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், இந்த வாகனங்களை கொண்டுசெல்வதில் சிக்கல் உள்ளது.. அதனால், மெயின் ரோட்டில் வழியாக வராமல், புறவழிச்சாலையில் உள்ள கிராமப்புறங்கள் வழியாக அதிக அளவு வாகனங்கள் சந்தைக்கு வந்தன.
தரமான நாட்டுக்கோழி ஒன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. அதேபோல, 10 கிலோ கொண்ட ஆடு ரூ.6500 முதல் ரூ.8000 வரை விற்கப்பட்டது.
மகிழ்ச்சி: விதவிதமான சேவல்களை கிராமப்புறங்களில் வளர்த்து வரும் இளைஞர்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வந்தனர். ரூ.3000 முதல் ரூ.30000 வரை சேவல்கள் விற்பனையாகின. ஆனாலும், விலையை பொருட்படுத்தாமல் நிறைய சேவல்களை வாங்கி சென்றார்கள்..
சேவல்கள்: தேர்தல் சமயத்தில் ஆடு, கோழிகள் எதிர்பார்த்த அளவு விற்பனையாகுமோ என்று விவசாயிகள் மிகவும் கவலையாக இருந்தார்கள். ஆனால், எதிர்பார்த்ததைவிட, நல்ல விலைக்கு அவைகள் விற்கப்பட்டதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்த விற்பனை வரும் வாரங்களில் இன்னும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் நம்பிக்கையாக சொல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications