மரம் நடுதல் விழிப்புணர்வு.. 'மா', 'புங்கம்' கன்றுகளை நட்ட பள்ளி மாணவர்கள்! நத்தத்தில் நெகிழ்ச்சி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் மரம் வளர்ப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
உலகம் முழுவதும் ஆக்சிஜன் விநியோகத்தில் மரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆனால், மனிதர்களின் வாழ்விடம் விரிவாக்கம், தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றன. அடுத்து வரும் தலைமுறையினருக்கு போதுமான அளவுக்கு இயற்கையை விட்டு செல்ல வேண்டிய பொறுப்பு மனிதர்களுக்கு இருக்கிறது. எனவே, மரம் நடும் இயக்கம் தற்போது அதிகரித்து வருகிறது.

மரங்களை நடுவதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி மட்டுமல்லாது, பறவைகள் மற்றும் வன விலங்குகளையும் பாதுகாக்க முடியும். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மரம் நடும் இயக்கம் நடைபெற்றிருக்கிறது. பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நத்தம் குழு மாணவர்கள், சமுதிராப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இளம் குழந்தைகள் மனதில் விவசாயம் மற்றும் ஊக்குவிக்கும் வகையில் 'மா' மற்றும் 'புங்கம்' கன்றுகளை நட செய்தனர்.
மேலும் தோட்டக்கலை கல்லூரி மாணவர்களும், ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்களும் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உயர் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
மாணவர்கள் மத்தியில் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வை இந்நிகழ்வு ஏற்படுத்தியதாக பெற்றோர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications