இளைஞருடன் உறவு.. டிக்டாக் வீடியோவில் கொஞ்சல்.. அதான் மனைவியை கொன்னுட்டேன்.. பகீர் வாக்குமூலம்
மனைவியை கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்
Recommended Video
திண்டுக்கல்: "என் மனைவி இளைஞரோடு ஜாலியாக இருந்தாள்.. டிக் டாக் வீடியோவில் கொஞ்சி கொஞ்சி பேசினாள்.. என்னால் ஆத்திரம் தாங்கவில்லை.. அதான் இப்படி செய்துட்டேன்" என்று கணவன் போலீசில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர் பகுதியில், போன மாசம் 14ந்தேதி ஒரு சாக்குமூட்டை ஜிகுஜிகுவென எரிந்துகொண்டிருந்தது. அதில் இருந்து குப்பென நாற்றம் வீசியதால், பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் சொன்னார்கள்.
இதையடுத்து விரைந்து வந்த போலீசார், எரிந்து கொண்டிருந்த அந்த சாக்குமூட்டையை அணைத்து, அதில் என்ன இருக்கிறது என்ற பார்த்தபோது, ஒரு பெண்ணின் பிணம் அரைகுறையாக எரிந்து கிடந்தது தெரியவந்தது.
அந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொன்றவர் யார் என்ற எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

விசாரணை
இதனிடையே, கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையை சேர்ந்த சிவசங்கரன் என்பவர், மனைவி சூர்யகுமாரியை காணவில்லை என்று கடந்த மாதம் போலீசில் புகார் தந்தார். இந்த புகாரின்பேரில் தான்தோன்றிமலை போலீசார் சூரியகுமாரியை தேடி வந்தனர். ஆனால் சிவசங்கரனின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் வரவும், அவரது செல்போனை ஆய்வு செய்யலாம் என்று முடிவு செய்தனர்.

சிக்னல்
அதற்காக செல்போனை போலீசார் கேட்கவும், தொலைந்துவிட்டது என்று சிவசங்கரன் சொன்னார். இதில் அவர்மீது போலீசாருக்கு இன்னும் சந்தேகம் அதிகமானது. அதனால் சைபர் கிரைம் மூலம் சிவசங்கரனின் செல்போன் ட்ரேஸ் செய்யப்பட்டது. அது, கடந்த மாதம் 8-ந்தேதி கொடைரோடு அருகே சிக்னலை காட்டியது.

விசாரணை
உடனே தோன்றிமலை போலீசார் கொடைரோடு அருகே ஏதாவது அசம்பாவிதம் கடந்த 8-ம் தேதி நடந்ததா என்று அம்மையநாயக்கனூர் போலீசாரிடம் கேட்கவும், சாக்குமூட்டையில், பெண் எரிந்து கிடந்த விவகாரம் பற்றி தெரிவித்தனர். இதையடுத்து சிவசங்கரனை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் மனைவியை தான்தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அப்போது அவர் சொன்னதாவது:

டிக்டாக் வீடியோ
"என் மனைவிக்கும் ஒரு இளைஞருக்கும் தகாத உறவு இருந்தது. அந்த இளைஞரோடு தனிமையில் மனைவி இருந்ததை நான் கண்டித்தேன். ஆனால் இருவருமே கள்ளக்காதலை கைவிடவில்லை. மேலும் அந்த இளைஞருடன் கொஞ்சி பேசுவதை போன்று நிறைய ‘டிக்-டாக்' வீடியோவை என் மனைவி வெளியிட்டார். இது எனக்கு மேலும் ஆத்திரத்தை கிளப்பியது. அதனால்தான் கொல்ல முடிவு செய்தேன். போன மாசம் 7-ந்தேதி இரவு, பெட்ரூமில் தூங்கிக்கொண்டிருந்த சூரியகுமாரியை இரும்பு கம்பியால் அடித்து கொன்றேன்.

சாக்குமூட்டை
உடலை சாக்குமூட்டையில் கட்டி பெட்ரூமில் வைத்துவிட்டு தூங்கினேன். மறுநாள் காலை காரில் சாக்கு மூட்டையை போட்டுகொண்டு, கொடைரோடு அருகே, காலியிடத்தில் அந்த மூட்டையையும், செல்போனையும் வீசிவிட்டேன். என் மீது யாருக்கும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக 9-ந்தேதி மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தேன்" என்றார். சாக்குமூட்டையில் இருந்து பிணவாடை தாங்காமல் யாரோ சிலர் தீ வைத்து உள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications