குப்பைக்கு போன ஜெயலலிதா படம்! அமைச்சர் நிகழ்ச்சியில் அதிர்ச்சி! கொந்தளிக்கும் அதிமுக..பறந்த கண்டனம்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தை குப்பையில் வீசிய அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா படம் அவமதிக்கப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக புதிய மின் கோட்டங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு தடையற்ற மின் சேவையை வழக்கும் வகையில் மின்வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மின் பகிர்மான கோட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.

மேலும் வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், திமுகவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார். முன்னதாக அந்த அலுவலகத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இருந்தது. திமுக அமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் ஜெயலலிதாவின் படத்தை அப்புறப்படுத்தியுள்ளனர் மின்வாரிய அதிகாரிகள்.
அதிர்ச்சி தரும் விதமாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அலுவலகத்திற்கு பின்புறம் இருந்த குப்பை தொட்டியில் வீசி உள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் அதிமுகவினர் கடும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். மேலும் அமைச்சரின் நிகழ்ச்சியில் முன்னாள் முதலமைச்சரின் புகைப்படம் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களிலும் கண்டனம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் புகைப்படம் அவமதிக்கப்பட்டதற்கு அதிமுக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்," மறைந்தும் மக்கள் உள்ளங்களில் வாழும் இதயதெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களை அவமானப் படுத்திய ஸ்டாலின் அரசுக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும் கடும் கண்டனம்.
மின் பகிர்மான கோட்ட அலுவலகத்தில் உள்ள மாண்புமிகு அம்மா அவர்களின் புகைப்படங்களை குப்பைத் தொட்டியில் வீசினால், மாண்புமிகு அம்மா அவர்களின் சாதனைகளை மறைத்துவிட முடியுமா? 2006-11 திமுக ஆட்சியில் இருண்டிருந்த தமிழ்நாட்டை, ஒளிரூட்டியவர் மாண்புமிகு அம்மா அவர்கள். மின்வெட்டு தமிழ்நாட்டை, மின்மிகை மாநிலமாக்கியவர்.
ஆட்சிக்கு வந்தது முதல் மின் கட்டண உயர்வை மட்டும் சரியாக செய்யும் இந்த கையாலாகாத ஸ்டாலின் மாடல் திமுக அரசின் அவமானச் செயலுக்கு, தமிழ்நாட்டு மக்களுடன் இணைந்து மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையிலான அஇஅதிமுக தக்க பதிலை 2026-ல் தரும்." என கூறியுள்ளார்.
-
தொகுதி மறுவரையறை! சண்டை செய்யும் திமுக.. வேடிக்கை பார்க்கும் அதிமுக! என்னதான் பிரச்சனை? -
மீண்டும் திமுக தான்.. விஜய்யின் தவெகவால் ஸ்டாலினுக்கு ‘ஜாக்பாட்’.. அதிமுகவிற்கு ஷாக்! டேட்டா பாருங்க -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
பச்சைத் துண்டு எடப்பாடி பழனிசாமி ஒரே போடு.. நிலமே இல்லாமல் விவாதமாகும் அசையா சொத்து விவரம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா! -
அசைக்க முடியாத அதிமுகவின் எஃகு கோட்டை..50 ஆண்டுகளாக திமுக வெல்லாத நிலக்கோட்டை! மல்லிகை ஊர் யாருக்கு? -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்!












Click it and Unblock the Notifications