என்னை பற்றி மட்டும் கேள்! செந்தில்பாலாஜி பற்றி வந்து விழுந்த கேள்வி! கடுகடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
திண்டுக்கல்: அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை பற்றி தன்னிடம் கேட்க வேண்டாம் எனக் கூறிவிட்டார் அமைச்சர் கே.என்.நேரு.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் ஆத்தூருக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் எனக் கூறிக்கொண்டிருந்த நேருவிடம், செய்தியாளர் ஒருவர் செந்தில்பாலாஜி பற்றி கேள்வி கேட்டார்.

இதையடுத்து அமைச்சர் நேருவின் முகம் கடுகடுவென மாறியதோடு, அவருக்கு ஏன் நான் முட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை போல் ஒரு ரியாக்ஷனை காட்டிவிட்டு என்னை பற்றி மட்டும் கேள் என டென்ஷன் ஆனார். மீண்டும் அதே கேள்வியை அந்த செய்தியாளர் முன் வைத்ததால், ஏம்பா என கோபித்துக்கொண்டு அங்கிருந்து சட்டென புறப்பட்டார் அமைச்சர் நேரு.
மொத்தத்தில் செந்தில்பாலாஜிக்காக தாம் வக்காலத்து வாங்கி பேச முடியாது என்பதை சீனியர் அமைச்சரான நேரு சூசகமாக தெரிவித்துவிட்டார். இதனிடையே கோவை மாநகராட்சி விவகாரத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் கே.என்.நேருவுக்கும், செந்தில்பாலாஜிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவது உள் விவகாரங்களை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக ஆர்.எஸ்.பாரதியை தவிர வேறு எந்த அமைச்சரும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வாய் திறக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதன் மூலம் திமுகவில் உள்ள முக்கியப் பிரமுகர்களே இந்த ரெய்டு படலத்தை ரசிக்கிறார்களா என்ற கேள்வியையும் எழ வைக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications