Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூட்யூப் வீடியோக்களால் விபரீதம்.. 12 உயிர்களை பலி கொண்ட அஞ்சு வீடு அருவி! தடை செய்யப்பட்ட பகுதியானது

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள ஐந்து வீடு (அஞ்சு வீடு) அருவியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அந்த அருவியில் மட்டும் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொடைக்கானல் ஐந்து வீடு அருவி உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத அருவிகளை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை கிராமத்தில் அமைந்துள்ள ஐந்து வீடு அருவி சுற்றுலா பயணிகளால் அதிக அளவில் வருகை தரும் இடமாகும். அந்த அருவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள் அருவிக்கு குளிக்கச் சென்றனர்.

அதில், கோயம்புத்தூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வந்த நந்தகுமார் (வயது 21) என்ற மருத்துவக் கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி மாயமானார். நான்கு நாள் தீயணைப்பு துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் மாணவர் உடலை தேடிய நிலையில், அருவி பகுதியில் பாறையில் நடுவே நந்தகுமாரின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது.

dindigul kodaikanal crime

கொடைக்கானல் அருவி

இந்த சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த "ஐந்து வீடு அருவி"யில் மட்டும் 12 பேர் பலியாகியுள்ளனர். இருப்பினும், அங்கு எச்சரிக்கை பலகைகள் இருந்த போதும், பலரும் அதை புறக்கணித்து நீராடச் செல்வதாக கூறப்பட்டது. சில யூட்யூபர்கள் இந்த அருவி குறித்து வீடியோ போட்ட நிலையில், இளைஞர்கள் இங்கு வரத் தொடங்கினர். மேலும், சில சுற்றுலா வழிகாட்டிகளும் பணத்தை பெற்றுக் கொண்டு இங்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஐந்து வீடு அருவி

இந்நிலையில், கொடைக்கானல் ஐந்து வீடு அருவி உள்ளிட்ட அங்கீகரிக்கப்படாத அருவிகளை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டம், வில்பட்டி ஊராட்சியில் பேத்துப்பாறை குடியிருப்பு பகுதி, ஐந்து வீடு குடியிருப்பு பகுதியில் உள்ள ஐந்து வீடு அருவி, அரசு அனுமதிக்கப்படாத வன அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் பாா்வையிடச் செல்கின்றனா்.

அனுமதியற்ற அருவிகள்

இந்த அருவிகளில் குளிக்கும்போது பலா் உயிரிழந்துள்ள நிலையில், இந்த பகுதிகளுக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு சுற்றுலாத் துறை, மாவட்ட நிா்வாகம் சாா்பில் தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது. வனத் துறை, வருவாய்த் துறை கட்டுப்பாட்டிலுள்ள அரசால் அனுமதிக்கப்படாத அருவிகளுக்குச் சென்று பாா்வையிடவும், குளிப்பதற்கும் முயற்சிக்கும் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

சுற்றுலா பாதுகாப்பு

மேலும் இந்த அருவிகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது காவல் துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், வருவாய்த் துறை, வனத் துறை, சுற்றுலாத் துறை, காவல் துறை அலுவலா்கள், இந்தப் பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொடைக்கானலைச் சுற்றியுள்ள அரசால் அங்கீகரிக்கபடாத அருவிகள் அனைத்தும் தடை செய்யபட்ட பகுதிகள். இந்தப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் அவர்களை அழைத்து வரும் வழிகாட்டிகள் அனைவரும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்" என கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+