kodaikanal: நெல்லை டூ கொடைக்கானல்.. வழி தெரியாமல் போன டிரைவர்! அந்தரத்தில் தொங்கவிட்ட ”கூகுள் மேப்”
கொடைக்கானல்: நெல்லையிலிருந்து கொடைக்கானல் (kodaikanal) வந்த லாரி டிரைவர், கூகுள் மேப்பின் தவறான வழிகாட்டுதலால் குறுகிய பாதையில் சிக்கி கொண்டுள்ளார். சின்னப்பள்ளம் நோக்கி சென்ற லாரி டிரைவர் வழி தெரியாமல் கூகுள் மேப்ஸ் பார்த்து வண்டியை ஓட்டியிருக்கிறார். ஆனால் லாரி செல்ல முடியாத குறுகலான பாதையில் வழிகாட்டியதால், லாரி முன் பின் நகர முடியாத வளைவில் வீட்டின் மீது மோதி அந்தரத்தில் தொங்கியது. இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.
முன்பெல்லாம், பழக்கம் இல்லாத ஊருக்குச் சென்றால் செல்லும் வழியில் யாரிடமாவது வழி கேட்டு செல்வதை வாகன ஓட்டிகள் வழக்கமாக வைத்திருந்தனர். ஆனால் தற்போதைய டிஜிட்டல் யுகத்தில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் செல்ல வேண்டுமென்றாலும் யாரிடமும் வழி கேட்காமல் நேராக சென்றுவிடலாம்.

கூகுள் மேப்ஸ் உதவி
கூகுள் மேப்பில் செல்ல வேண்டிய இடத்தை மட்டும் போட்டால் போதும்; அதுவே நேராக அழைத்து சென்றுவிடும். கூகுள் மேப்ஸ் போன்ற ஜி.பி.எஸ். வழிகாட்டி செயலிகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் பயன் அடைந்தாலும், சிலர் அதை பயன்படுத்தத் தெரியாமல் தவறான இலக்கை பதிவிடுவது, காரில் செல்லும்போது பைக்கிற்கான ரூட் போடுவது போன்ற சிறிய தவறுகளைச் செய்கிறார்கள்.
இதனால், அவை ஏதோ ஒரு ஏடாகூடமான பாதையில் கொண்டு போய், வாகன ஓட்டிகளை திண்டாட வைக்கிறது. இது ஒருபக்கம் என்றால், கூகுள் மேப்ஸிலேயே அப்டேட் இல்லாமல் பழைய ரூட்டை காட்டி, வாகன ஓட்டிகளை திக்கி திணறடிக்கிறது. இப்படியான ஒரு நிகழ்வுதான் நெல்லையிலிருந்து கொடைக்கானலுக்குச் சென்ற லாரி டிரைவருக்கு நேர்ந்துள்ளது.
நெல்லை டூ கொடைக்கானல் சென்ற லாரி
நெல்லையிலிருந்து வீட்டு உபயோகப் பொருட்கள் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று கொடைக்கானலுக்கு புறப்பட்டது. கொடைக்கானலின் சின்னப்பள்ளம் நோக்கி அந்த லாரி சென்றுகொண்டிருந்தது. லாரியை நெல்லையைச் சேர்ந்த அந்தோணி என்ற டிரைவர் ஓட்டி சென்றார். கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்ததும், செல்ல வேண்டிய இடம் தெரியாமல் அந்தோணி திணறினார்.
இதனால் அவர் கூகுள் மேப்பைப் பார்த்தபடி லாரியை ஓட்டினார். ஆனால் அவர் கொடைக்கானல் சின்னப்பள்ளம் செல்லும் பிரதான சாலையில் செல்லாமல், பாக்கியபுரம் குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் சாலையில் சென்றுள்ளார். கூகுள் மேப் தவறான வழிப்பாதையை காட்டியதாக சொல்லப்படுகிறது. சின்னப்பள்ளம் பிரதான சாலையைப் போன்று இல்லாமல், பாக்கியபுரம் குடியிருப்புக்குச் செல்லும் சாலை குறுகியதாய் இருந்தது.
வீட்டின் மீது மோதி நின்ற லாரி
மேலும் அது ஏற்றம், இறக்கம் கொண்டதாகவும் இருந்தது. இந்த குறுகலான பாதையில் லாரியை இயக்க முடியாமல் அந்தோணி திணறினார். இதனால் தடுமாறிய அவர், லாரியை குறுகிய பாதையின் வளைவில் திருப்ப முயன்றார். அப்போது முன்னோக்கிச் செல்ல முடியாமலும், பின்னோக்கி இயக்க முடியாமலும் லாரி நின்றது. சற்றுநேரத்தில் லாரி பின்னோக்கிச் சென்று அங்கிருந்த வீட்டின் மீது மோதியது.
அந்தரத்தில் தொங்கியது
பின்னர் சாலையோர பள்ளத்தில் இறங்கி, அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தோணி உடனடியாக லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் லாரியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி, போக்லைன் எந்திரத்தை வரவழைத்து சுமார் 5 மணி நேரம் போராடி லாரியை மீட்டனர். லாரி மோதியதில் வீட்டின் ஒருபக்கச் சுவர் சேதமடைந்தது. கூகுள் மேப்ஸ் பார்த்து தவறான ரூட்டில் சென்றதால் லாரி சிக்கிய இந்த நிகழ்வு, கொடைக்கானலில் வாகன ஓட்டிகள் இடையே பரபரப்பாக பேசப்பட்டது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications