மோடி ஆட்சிக்கு எதிராக 'கொலவெறியில்' தமிழகம்-அண்ணாமலை கோவைக்கு ஓடினாலும் ஜெயிக்க முடியாது...ஜோதிமணி
திண்டுக்கல்: தமிழ்நாட்டு வாக்காளர்கள் பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக கொலவெறியில் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்; இதனால் கரூர் தொகுதியை சேர்ந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதிக்கு ஓடிப் போய் போட்டியிட்டாலும் வெல்லவே முடியாது என கரூர் லோக்சபா தொகுதி எம்பி ஜோதிமணி எம்பி கடுமையாக சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் லோக்சபா தொகுதியில் திமுக இம்முறை போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் இந்த முறையும் கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது. கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்பி ஜோதிமணியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கரூர் லோக்சபா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கிவிட்டார் ஜோதிமணி. கரூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற "இந்தியா" கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஜோதிமணி நேற்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, வேடசந்தூர் திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் தொகுதியில் ஜோதிமணி எம்பி வாக்கு சேகரித்தார்.
ஜோதிமணி எம்பி வேடசந்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்த போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவை என்ன ஒரு பொருட்டா நினைக்க சொல்றீங்க? பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர் லோக்சபா தொகுதியைச் சேர்ந்தவர். பாஜக ஆஹா, ஓஹோன்னு இருக்கிறது எனில் நரேந்திர மோடி ஆஹா, ஓஹோன்னு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் அண்ணாமலை, சொந்த ஊரில் சொந்த தொகுதியில் நிற்க வேண்டியதுதானே? எதற்காக கோயம்புத்தூருக்கு அண்ணாமலை ஓடவேண்டும்? அப்ப கரூரில் ஜெயிக்க முடியாது என்பது அவருக்கே தெரியும். அதனால்தான் கோவைக்கு ஓடுகிறார். அதனால்தான் பாஜகவை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டியதும் இல்லை. கோவையிலும் அதான் நடக்கப் போகிறது. கரூரில் என்ன நடக்கும் என பயந்துகிட்டு கோவைக்கு போறீங்களோ அதுதான் அங்கேயும் நடக்கப் போகிறது.

தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக 'கொலவெறி'யில் இருக்கிறார்கள். வெள்ளம் வருது.. புயல் வருது.. மக்கள் கண்ணீரிலும் தண்ணீரிலும் தத்தளிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுங்கள் என தமிழ்நாட்டு முதலமைச்சர் கேட்கிறார்.. ஆனால் நயா பைசா வந்ததா? வரலை.. பிரதமர் மோடி வந்தாரா? வரலை.. இப்ப எதுக்கு 5 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்? தேர்தல் நடைபெறுகிறது என்பதற்காக மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்நாடு மக்கள் கஷ்டப்பட்ட போது வராத பிரதமர் மோடிக்கு இப்போது தமிழ்நாட்டில் என்னவேலை? மோடி 100 முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லையே.. இவ்வாறு ஜோதிமணி எம்பி தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி, 6,95,697 (63.06%) வாக்குகளைப் பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்ட ஜோதிமணிக்கு 30,459 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அத்தேர்தலில் அதிமுகவின் தம்பிதுரை வெற்றி பெற்றார். திமுகவின் சின்னசாமி 2-வது இடத்தையும் தேமுதிகவின் கிருஷ்ணன் 3-வது இடத்தையும் பெற்றார். ஜோதிமணிக்கு 4-வது இடம்தான் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications