ஏம்ப்பா தள்ளி உட்காரு.. நான் தான் ஷூ பாலிஷ் இன்னிக்கு.. கொடைக்கானலை கலக்கிய மன்சூர்

கொடைக்கானல் பகுதியில் ஷூ பாலிஷ் போட்டு தந்து வாக்கு சேகரித்து வருகிறார் மன்சூரலிகான்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கொடைக்கானலில் மன்சூர் அலிகான் அனல் பறக்கும் பிரச்சாரம்-வீடியோ

    திண்டுக்கல்: ஷூ பாலிஷ் போட செருப்பு தைக்கும் கடையிலேயே உட்கார்ந்துவிட்டார் மன்சூரலிகான்!

    அனைத்து கட்சி சார்பில் இந்த தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தாலும், இருக்கும் வேட்பாளர்களிலேயே மக்களின் கவனத்தை வெகு சீக்கிரத்தில் ஈர்த்துள்ளது மன்சூரலிகான்தான்!

    திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்! தேர்தல் தேதி, வேட்பாளர்கள் எல்லாம் யார் என்று கட்சிகள் அறிவிக்கும் முன்னரே, திண்டுக்கல் தொகுதிக்குள் இறங்கிவிட்டார் மன்சூரலிகான்!

    ஆழமான அரசியல்

    ஆழமான அரசியல்

    சட்னி அரைத்து கொடுப்பது, ஊசி, பாசிமணி விற்பது, கறிக்கடைக்குள் சென்று மட்டன் கட் பண்ணுவது, இளநீர் வெட்டுவது, குப்பை அள்ளுவது.. என நூதன முறையில் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளார்.
    ஒரு பக்கம் இது காமெடியாக பார்க்கப்படுவது இருந்தாலும், மற்றொரு பக்கம் ஆழமான அரசியலை உள் மனதில் விதைத்து கொண்டுதான் மன்சூர் இந்த காரியங்களில் இறங்கி வருகிறார்!

    கடையில் உட்கார்ந்தார்

    கடையில் உட்கார்ந்தார்

    நேற்று ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களிடம் ஓட்டு கேட்டு கொண்டே வந்த மன்சூரலிகான், திடீரென அங்கிருந்த செருப்பு தைக்கும் கடைக்குள் நுழைந்துவிட்டார். அந்த கடை ஓனரை தள்ளி உட்கார சொல்லி இவரே போய் அந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டார்.

    ஓட்டு சேகரிப்பு

    ஓட்டு சேகரிப்பு

    கையில் ஷூ பாலிஷ் போடும் பிரஷ்ஷை எடுத்து கொண்டு அங்கு வருபவர்களின் செருப்பு, ஷூக்களுக்கு பாலிஷ் போட ஆரம்பித்துவிட்டார். சும்மா சொல்லக்கூடாது.. ஓட்டு கேக்க வந்தவர் போலவே இல்லை.. அவ்வளவு சூப்பராக செருப்புகளுக்கு பாலிஷ் போட்டு தருகிறார்!

    கையில் பிரஷ்

    கையில் பிரஷ்

    செருப்பு தைக்க வந்த கூட்டத்தைவிட, மன்சூரை பார்க்க வந்த கூட்டம்தான் அதிகம். இதில் ஷூ பாலிஷ் போட வந்தவர் ஒருவர் தன் ஷூவை மன்சூரிடம் தந்து பாலிஷ் போட சொன்னதுடன், அவர் பக்கத்தில் உட்கார்ந்து செல்பி எடுத்து கொண்டார். ஒரு கையில் பிரஷ்ஷை பிடித்துகொண்டு, மற்றொரு கையில் கஸ்டமர் தோளில் கை போட்டுக் கொண்டு போஸ் போடுக்கிறார் டெம்ப்ரவரி ஷூ பாலிஷ் கடை ஓனர்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+