Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!
திண்டுக்கல்: தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலில் திண்டுக்கல் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட திமுக சார்பில் புதுமுகங்கள் பலரும் விருப்பமனு அளித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

தேர்தல் திருவிழா
தமிழக சட்டசபைத் தேர்தல் திருவிழா களைக்கட்டியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் வேட்பாளர்களை ஃபைனல் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி வெளியாகலாம் என்பதால், அதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் பட்டியலும் வெளியாகலாம் எனத் தெரிகிறது.
திண்டுக்கல் தொகுதி
திண்டுக்கல் சட்டசபைத் தொகுதியை பொறுத்தவரை இஸ்லாமியர்களின் ஓட்டு வங்கி கணிசமாக உள்ள ஒரு தொகுதியாகும். இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை வீழ்த்த திமுக இந்த முறை பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது.
புதுமுகங்கள் ஆர்வம்
அதன்படி பழனி சட்டசபைத் தொகுதி உறுப்பினராக உள்ள ஐ.பி.செந்தில்குமாரை இந்த முறை திண்டுக்கல்லில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே திண்டுக்கல் சீனிவாசனை நாங்கள் வீழ்த்திக் காட்டுகிறோம் எனக் கூறி திமுகவில் இரண்டு புதுமுகங்கள் சீரியஸாக சீட் கேட்டிருப்பது தான் ஹைலைட் ஆகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மகளிர் ஆணைய உறுப்பினரும், கொடைக்கானல் நகராட்சி கவுன்சிலருமான ஷாமிலி பிரபா என்பவர் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு விருப்ப மனு அளித்திருக்கிறார்.
பின்னணி என்ன?
சென்னையில் வழக்கறிஞராக இருந்து வந்த ஷாமிலி பிரபா, 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் சொந்த ஊரான கொடைக்கானல் திரும்பினார். அப்போது தனது தந்தை கே.வி.எம்.ஜீவாவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் அதை அவர் விரும்பாத பட்சத்தில் தாம் போட்டியிட்டு கவுன்சிலராக வென்றார் ஷாமிலி பிரபா.
தொழிலதிபர் மகன்
இவரைப் போலவே திண்டுக்கல் மாமன்ற உறுப்பினரும், தொழிலதிபர் ரத்னம் மகனுமான கே.கே.ஆர்.வெங்கடேசும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் செலவைப் பற்றி கவலைப்படாதவர் என்றாலும் வயதைக் காரணம் காட்டி உள்ளூர் திமுகவினர் சிலர் அவருக்கு போதிய ஒத்துழைப்பு நல்குவதில்லை எனக் கூறப்படுகிறது.
திண்டுக்கல் தேர்தல் வெற்றி
திண்டுக்கல்லில் 1952 ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆரம்ப காலங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்று வந்தார். அதை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியும் 6 முறை வென்றுள்ளது. அதிமுக 4 முறை வென்றுள்ளது.
அண்மைக்காலமாக அதிமுகவின் கோட்டையாக திகழ்கிறது திண்டுக்கல். இங்கு திமுக ஒரு முறை மட்டுமே 1996ஆம் ஆண்டு வென்றுள்ளது. கடந்த முறை கூட அந்த தொகுதி திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்டுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் 17 ஆயிரம் வாக்குகளில் தோல்வி கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு திமுக நேரடியாக அதிமுகவை எதிர்த்து போட்டியிட்டும் தோல்வியே மிஞ்சியது.
இதனால் இந்த முறை திமுக போட்டியிட வேண்டும் என அந்த பகுதி நிர்வாகிகள் விரும்புகிறார்கள். தற்போது விருப்பமனுவுக்கு தாக்கல் செய்துள்ளதால் ஐ.பெரியசாமியின் மகன் களமிறக்கப்படுவாரா இல்லை சீட் கேட்ட புதுமுகங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது போக போக தெரியும்- சிறப்பு நிருபர் அர்ஷத் கான்.
-
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
164 தொகுதிகளில் களமிறங்கும் திமுக! வேட்பாளர்கள் யார்? மாலையில் அறிவிக்கும் ஸ்டாலின்? -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம் -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
திமுக கூட்டணியில் தொகுதி லிஸ்ட்: வேட்பாளர் பட்டியல் இன்னும் வராதது ஏன்? பின்னணியில் 3 முக்கிய காரணம்












Click it and Unblock the Notifications