திண்டுக்கல்லில் கம்யூனிஸ்டுகள் மீது கொலைவெறி தாக்குதல்.. இந்து முன்னணி, பாஜக மீது சண்முகம் புகார்
திண்டுக்கல்: தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் 'மத்திய, மாநில அரசுகள் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி பிரச்சார இயக்கம்' என்று கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார், இந்து முன்னணி நடத்தும் முருகன் மாநாடு குறித்து பேசிய பேச்சுக்கு, இந்து முன்னணி நிர்வாகி வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஏற்பட்ட கடும் சண்டையில் இருதரப்பினரும் காயம் அடைந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கும் மோதல் ஏற்பட்டது.அங்கு பாஜகவினரும் வந்தனர். இருதரப்பும் கடுமையாக மோதிக்கொண்டனர். இது தொடர்பாக இருதரப்புமே புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்து ஆர்.சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியம், சண்முகவேல், ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சரத்குமார் மற்றும் சண்முகவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற கட்சியின் தோழர்களை கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர் அங்கேயும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளியான ஜெயந்தி, பொன்மதி, பெருமாள், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மக்கள் மத்தியில் தாங்கள், அம்பலமாவதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜக குண்டர்கள் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது," என்று பெ சண்முகம் கூறியுள்ளார்.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications