Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மலை மலையாய் சோறு.. அண்டா அண்டாவாய் ஆட்டுக் கறி! நத்தம் ஃபுல்லா கறி வாசம்.. அதென்ன வேட்டைக்காரன்?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வேட்டைக்காரன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடாய்கள், 100 முட்டை அரிசி சாதம் சமைக்கப்பட்டு அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு விடிய விடிய விருந்து நடைபெற்றது.

தென் மாவட்டங்களில் பொதுவாக திருவிழா என்றாலே அது கறி விருந்துடன் மட்டுமே நடைபெறும். குறிப்பாக இரவு நேரத்தில் நடைபெறும் வினோத திருவிழாக்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் நடத்தப்படுகின்றன.

Dindigul feast spirituality

அப்படி பார்க்கையில் திருப்பரங்குன்றம் அருகே உள்ள உச்சிக் கருப்பண்ணசாமி கோயில், மேலூர் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி, ஆண்கள் மட்டுமே நடத்தும் திருவிழாவில் 70 க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சேவல்கள் பலியிடப்பட்டு மண்பானையில் வேப்பிலை வைத்து சமைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இரண்டாவது வாரத்தில் எல்லை பிடரி அம்மன் கன்னிப் பெண் குலதெய்வத்தை ஆண்கள் மட்டுமே கூடி வழிபாடு செய்வது வழக்கம். இப்படி நிறைய இடங்களில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாக்கள் பிரபலம். இது போன்ற கோவில்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டு..

Dindigul feast spirituality

அப்படி ஒரு கோவில் தான் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள உலுப்பகுடியில் அமைந்திருக்கும் வேட்டைக்காரன் கோவில். சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் மாசி மாதம் திங்கட்கிழமையன்று திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த கோவிலில் பக்தர்கள் தாங்கள் வளர்த்த கிடாய்களை மட்டும் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலையும் கிடைப்பதாக கிராம மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Dindigul feast spirituality

இந்நிலையில் இந்த ஆண்டு கோட்டைக் காரன் சுவாமி கோயில் மாசித் திருவிழா தொடங்கி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 50 ஆட்டு கிடாய்கள் மற்றும் கோழிகள் சுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டது. அதிகாலை 1 மணிக்கு பொங்கல் வைக்கப்பட்டு கிடாய் மற்றும் கோழிகள் வெட்டப்பட்டது. பின்னர் பத்தாயிரம் பக்தர்களுக்கு வெட்டப்பட்ட ஆடு மற்றும் கோழி இறைச்சிகளை, இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவிலான பாத்திரங்களை பயன்டுத்தி உணவுகள் தயார் செய்யப்பட்டன.

Dindigul feast spirituality

100 மூட்டை அரிசி மூலம் சாதமும் தயார் செய்யப்பட்டது. தொடர்ந்து சமைக்கப்பட்டு மலைபோல் குவித்து வைக்கப்பட்ட உணவுகளை, வேட்டைக்காரன் சுவாமிக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து வழிபாட்டில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல், நத்தம்,புண்ணாபட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் வயது பேதமின்றி கறி விருந்தை மகிழ்ச்சியுடன் உண்டனர்.

சாதமும், ஆட்டுகறி குழம்பும் பிரசாதமாக பறிமாறப்பட்ட நிலையில், இந்த விருந்தில் மீதமான உணவுகளை வீட்டுக்கு கூட எடுத்துச் செல்லக்கூடாது. ஒரு வேளை மீந்துவிட்டால் கூட அதனை குழி தோண்டி புதைத்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+