சீமானுக்கும் விஜய்க்கும் தான் போட்டியே! அதுவும் 3வது இடத்துக்கு தான்! ஒரே போடாகப் போட்ட ஐ.பெரியசாமி
திண்டுக்கல்: திமுகவை விமர்சிக்கும் விஜய்க்கு அரசியல் அரிச்சுவடியே தெரியாது எனவும், மூன்று தேர்தல் களத்தைச் சந்தித்த சீமான் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சொன்னாலும், 8 சதவீதம் வாக்குகளைத்தான் வாங்கி உள்ளார் எனக் கூறியுள்ளார் திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஐ.பெரியசாமி. மேலும், v வரும் தேர்தலைப் பொருத்தவரை 3வது இடத்தைப் பெறப் போவது என்பதுதான் சீமானுக்கும் விஜய்க்குமான போட்டியாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.
திமுக நிறுவனரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை ஒட்டி திண்டுக்கல்லில் உள்ள அவரது உருவச் சிலைக்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திமுகழகத்தின் தலைவர் இந்தியாவின் தலைசிறந்த முதல்வர் ஸ்டாலின் மக்களுக்காக எல்லாத் திட்டங்களையும் வழங்கி, மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கின்றார்.

ஐ பெரியசாமி
அவர் மீண்டும் 2026 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக ஆட்சிப் பீடம் ஏற இருக்கிறார். ஆனால் விஜய் அவரைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாகச் சொல்கிறீர்கள். முதல்வர் ஸ்டாலினை எந்த விமர்சனமும் தொட்டுப் பார்க்க முடியாது. காரணம் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எல்லாச் சார்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களைத் தந்து, தொழில்துறையில் மட்டுமல்லாது, எல்லாத் துறையிலும் இன்றைக்குத் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. விஜய் இன்றைக்குத்தான் வந்திருக்கிறார். அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி அவர்கள் இரண்டாவது இடத்திற்கு வர வேண்டும் என்று முயற்சி செய்கிறார்.
2026 தேர்தல்
மூன்றாவது இடத்திற்கு வர வேண்டும் என்று சீமானும் விஜய்யும் முயற்சி செய்கிறார்கள். மூன்றாவது இடம் நான்காவது இடத்திற்குத்தான் முயற்சி செய்கிறார்கள். இவர்கள் ஒரு இடத்தைக் கூட தமிழ்நாட்டில் பிடிக்க முடியாது. இவர்கள் விமர்சனம் செய்யச் செய்ய மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கின்ற தளபதியாருக்கு 200 தொகுதி என்று கூறினார்கள். இன்னும் கூடுதல் தொகுதி திமுக கூட்டணி வெற்றி பெறும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன்."
நாம்தமிழர் கட்சி
விஜய் வந்து இன்னும் தேர்தல் களத்தைச் சந்திக்கவில்லை. மூன்று தேர்தல் களத்தைச் சந்தித்த சீமான் அவர் ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சொன்னார். 8 சதவீதம் வாக்குகளைத்தான் வாங்கி உள்ளார். ஒருவேளை இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை சீமானுக்கும் விஜய்க்கும்தான் போட்டி. திமுகவுக்கு யாரும் போட்டியில்லை. முதல்வருக்குப் போட்டி யாரும் இல்லை. ஒரு வீட்டில் இருக்கக்கூடியவர்கள் அப்பா அம்மா முதியோர் உதவித் தொகையில் பயன்பெறுகிறார்கள்.
விஜய் அரசியல்
மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம். கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் அனைத்துத் தரப்பு வாக்குகளும் மொத்தமாக வந்து குவியும். விஜய் போன்றவர்களெல்லாம் 20,000, 25,000 வாக்கு தாண்ட மாட்டார்கள். திமுக பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் எல்லாத் தொகுதியிலும் வெற்றி பெறும். விஜய் பற்றி எங்களுக்குக் கவலையே இல்லை. அவரைப் பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை. யாரோ ஒருவர் பேசுகிறார். சினிமா பார்க்கப் போகிறார்கள், பார்த்துவிட்டு வெளியே வந்தால் மறந்துவிடுவார்கள்.
முக ஸ்டாலின்
பொழுதுபோக்குக்காக விஜய்யைப் பார்க்கிறார்கள். சினிமாவில் பார்த்தோமே, நேரில் பார்க்கலாம் என்று செல்கிறார்கள். அவ்வளவுதான். நம்முடைய முதல்வர் வரும்போது எவ்வளவு கூட்டம் வரும் என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். யாரோ சொல்லி கட்சி ஆரம்பித்துள்ளார் விஜய். விஜய் எல்லாம் வந்து நிச்சயமாகச் சொல்கிறேன். அரசியல் அரிச்சுவடி தெரியாது. நான் போனால் கூடத்தான் ஆயிரம் பேர் வருவார்கள்.
திமுக
ஆயிரம் பேர் வாக்களித்தால் பெட்டி தாங்குமா? பார்ப்பதற்கு வருவதெல்லாம் ஓட்டு ஆகாது. தேர்தல் களத்தில் திமுக தொண்டன் டீ கூடக் குடிக்காமல் வேலை பார்ப்பார். எல்லோரும் டெபாசிட் இழக்க நாங்கள் முயற்சி செய்வோம். அதுதான் எங்களுடைய குறிக்கோள். நான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்று விஜய்யைச் சொல்லச் சொல்லுங்க. யாரை வேண்டுமானாலும் குறை சொல்லலாம். குறை சொல்வது எளிது, செயலாற்றுவது சிரமம்" என்றார்.












Click it and Unblock the Notifications