விஜய்க்கு செல்லும் இளைஞர் வாக்குகள்.. அதற்காக தான் லேப்டாப்பா? அமைச்சர் சக்கரபாணி சொன்ன பதில்!
திண்டுக்கல்: எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.. நிச்சயமாக தமிழக முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுவார். ஏழாவது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் எனவும், விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும், அதற்குப் பிறகு பார்க்கலாமென திண்டுக்கல்லில் உணவு மற்றும் உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.
'உங்கள் கையில் உலகம்' திட்டம் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் 10 லட்சம் அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியை சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எம்விஎம் அரசு கல்லூரியில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பழனி எம்.எல்.ஏ ஐபி செந்தில்குமார் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கினர்.
இலவச மடிக்கணினி திட்டம்
அதனைத் தொடர்ந்து அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்," முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க உள்ளது. திண்டுக்கல்லில் மட்டும் 2321 பேருக்கு மடிக்கணினி வழங்க இருக்கிறது. புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல மாணவர்கள் போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெற்று வெற்றி பெறுகின்றனர். தமிழக முதல்வர் காணொளியில் பேசியபோது, மாணவர்கள் அனைவரும் மடிக்கணினியை மூலம் நல்ல முறையில் வெற்றி பெற வேண்டும், அதேபோல் தேர்தலில் நானும் வெற்றிபெற்று, இருவரும் சேர்ந்து தமிழ்நாட்டை நல்ல முறையில் கொண்டு செல்வோம் என்றார்.
அமைச்சர் சக்கரபாணி பேச்சு
தேர்தல் நெருங்கி வருவதால் தான் மடிக்கணினி, பொங்கல் பரிசு போன்றவை வழங்குகிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என்ற கேள்விக்கு, கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் இழந்து மக்கள் தவித்த போது, அன்றைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் அவர்கள் ஒரு குடும்பத்திற்கு 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அன்று முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வெறும் ஆயிரம் ரூபாய் வழங்கினார்.
பொங்கல் பரிசு
ஆனால், திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்பு 2021,22,23 ஆகிய காலங்களில் பொங்கல் பரிசு கொடுத்து வந்தோம். கடந்த ஆண்டு மட்டுமே கொடுக்கவில்லை அதற்கும் சேர்த்து இந்த ஆண்டு 3000 ரூபாயாக வழங்குகிறோம். மேலும் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் வேட்டி சேலைகளும் வழங்க இருக்கிறோம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 23 ஆண்டு கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றி உள்ளார். குழந்தைகள் பெண்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் போன்ற அனைவருக்கும் முக்கியத்துவம் கொடுத்து திமுக ஆட்சி நடந்தி வருகிறது." என்றார்
விஜய் இளைஞர் வாக்குகள்
விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு இருப்பதால், வாக்கு செலுத்த இருக்கும் மாணவர்களுக்கு லேப்டார் வழங்கப்படுகிறது என்ற கேள்விக்கு, " யாராக இருந்தாலும் தேர்தலை சந்திக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம். பல்வேறு தியாகங்கள் போராட்டங்கள் செய்து பேரறிஞர் அண்ணா, கலைஞர் , முக ஸ்டாலின் என அனைவரும் 75 ஆண்டுகளாக ஆட்சியமைத்து வந்திருக்கிறோம். அவர்களும் மக்களை சந்திக்கட்டும். மக்கள் தீர்ப்பு வரட்டும். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மீண்டும் வெற்றி பெறுவார். ஏழாவது முறையாக திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். திண்டுக்கல்லில் இருக்கின்ற ஏழு சட்டமன்ற தொகுதிகளிலும் திராவிட அரசு கூட்டணி வெற்றி பெறும்" என்று தெரிவித்தார்.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
SV Shekher: 'புதருக்கு பின்னால் ஏன் அந்த பொண்ணு போகணும்' சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் எஸ்வி சேகர் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!












Click it and Unblock the Notifications