இப்படியும் ஒரு அப்பாவா?.. பஸ் ஸ்டாண்டில் கதறிய 2 குழந்தைகள் மீட்பு.. திண்டுக்கல் எஸ்பி செய்த சபாஷ்
பரிதவித்த குழந்தைகளை உறவினர்களிடம் ஒப்படைத்தார் திண்டுக்கல் எஸ்பி
திண்டுக்கல்: பஸ் ஸ்டாண்டில் 2 குழந்தைகளை தவிக்கவிட்டு மது அருந்த சென்றுவிட்டார் அப்பா.. இதையடுத்து, பரிதவித்து கொண்டிருந்த குழந்தைகளை அவர்களின் உறவினர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஒப்படைத்துள்ளார்.
Recommended Video
திண்டுக்கல்லில் 2012-ம் ஆண்டு நடந்த பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடையவர் நந்தவனப்பட்டி அருகே வள்ளுவர் நகரைச் சேர்ந்த நிர்மலா....

இவர் செப்டம்பர் 22-ம் தேதி மர்ம நபர்களால் தலை துண்டித்துக் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்துவருகிறது
இதைதவிர, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கொலை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. எனவே, இவற்றை தடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கூடுதலாக 2 காவல் ரோந்து வாகனங்களை திண்டுக்கல் பஸ் நிலையத்தில் துவக்கி வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தேவைப்படும் பகுதிகளில் ரோந்து வாகனங்களை அதிகரித்து குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் கண்காணிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.. அப்போது, அங்கு தனியாக 2 குழந்தைகள் உட்கார்ந்திருந்தனர்.. அவர்களிடம் சென்று யார், என்ன என்று விசாரித்தார்.. பிறகுதான் தெரிந்தது, அவர்கள் காரைக்குடியைச் சார்ந்தவர்கள்.. அவர்களின் அப்பா 2 குழந்தைகளையும் அழைத்து வந்து, இங்கே உட்கார வைத்துவிட்டு, மது அருந்த டாஸ்மாக் கடைக்கு சென்றிருக்கிறார்..
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை என்று அந்த குழந்தைகள் கண்ணீர் மல்க கூறினார்கள்.. இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த கண்காணிப்பாளர் உடனடியாக அந்த குழந்தைகளின் அப்பாவை போலீசார் மூலம் அழைத்து வர செய்தார்.,.. ஆனால், அவர் அதிக போதையில் இருந்ததால், அந்த குழந்தைகளின் அம்மா, மற்றும் உறவினர்களை தொடர்பு கொண்டு திண்டுக்கல்லுக்கு வரவழைத்தார்...
இதுபோன்று மது அருந்தும் நபர்களிடம் யாரும் தங்கள் குழந்தைகளை நம்பி அனுப்பி வைக்க வேண்டாம் என்று எடுத்துரைத்து, 2 குழந்தைகளையும் அவர்களின் அம்மாவுடன் அனுப்பி வைத்தார்... பொதுமக்கள் முன்னிலையிலேயே நடந்த இந்த சம்பவம் மிகுந்த பாராட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பெற்று தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications