பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்! கூடவே வலம் வந்த மெர்சி செந்தில்குமார்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை பொறுத்தவரை ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் உடையவர். தமிழ்நாடு முழுவதும் கோவில் கோவிலாக சென்று வழிபடக்கூடியவர். துர்கா ஸ்டாலின் தனது கொள்கைக்கு நேர் எதிரானவர் என்றாலும் கூட, தனிநபர் சுதந்திரத்தில் ஸ்டாலின் தலையிட்டதில்லை. அவரது ஆன்மிக பயணத்திற்கு ஒரு போதும் தடை போட்டதில்லை.

குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அந்த ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு விசிட் அடிக்க தவறமாட்டார் துர்கா ஸ்டாலின். இதனிடையே இன்றைய தினம் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்து மனமுருக வழிபட்டார். அவருடன் அவரது தங்கை ஜெயந்தி, பழனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மனைவி மெர்சி ஆகியோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
துர்கா ஸ்டாலினின் பழனி வருகை குறித்த தகவல் லோக்கல் கட்சிக்காரர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேவையற்ற கூட்டம் கூடும் என்பதால் இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். ரோப் கார் மூலம் மலைக்கு சென்ற துர்கா ஸ்டாலினை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். முன்னதாக துர்கா ஸ்டாலின் வருகையையொட்டி கோவிலில் முன்னேற்பாடுகளை மெர்சி செந்தில்குமார் செய்து வைத்திருந்தார்.
பழனி முருகன் கோவில் பிரசாதங்களை பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின் மீண்டும் ரோப் கார் மூலம் மலையிலிருந்து இறங்கி காரில் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே இந்த நிகழ்வு முடிந்து புறப்படும் போது மெர்சி செந்தில்குமார் குடும்ப விவகாரங்கள் சிலவற்றை துர்கா ஸ்டாலினிடம் மனம் விட்டு பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications